பேருந்திலேயே ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்.. மனதை பிழியும் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 13, 2019 04:50 PM

வேலூரில் விடுமுறையே இல்லாமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் போக்குவரத்துக்குட்பட்ட பேருந்து ஓட்டுநர், மாரடைப்பால் பேருந்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Transport driver died in bus itself after working contionusly

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அழகாபுரி மாரியம்மன் கோயில் தெருவில் வசித்துவந்த 45 வயதான தர்மராஜ், வேலூர் கொணவட்டத்துக்குட்பட்ட அரசுப் போக்குவரத்து பணிமனையில் டிரைவராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 நாட்களாக விடுப்பின்றி தொடர்ச்சியாக பேருந்து ஓட்டியுள்ளார். 

கடைசியாக நேற்று பெங்களூரிலிருந்து வேலூருக்கு பேருந்தை இயக்கிவந்த இவரது உடல்நிலை சரியில்லாமல் போகவும், உடனே அருகில் இருந்து தனியார் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அவர் என்ன நிர்ப்பந்தத்தில் உடனடியாக பணிக்குத் திரும்பினார் என்பது தெரியவில்லை. எனினும் உடல்நிலை சரியில்லாத தர்மராஜூக்கு வேலூர்-தாம்பரம் செல்லும் பேருந்தை இயக்குவதற்கான டியூட்டி வழங்கப்பட்டதை அடுத்து, அவர் பணிமனை சென்று, அதற்கான பேருந்தை எடுத்துக்கொண்டு பேருந்து நிலையம் வரை இயக்கி வந்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பேருந்தை ஓரிடத்தில் வந்து நிறுத்தியபோது அவர் தன் இருக்கையிலேயே மயங்கியுள்ளார்.

இதனை அறிந்த சக பேருந்து ஓட்டுநர்கள் அவரை 108 ஆம்புலன்ஸின் உதவியோடு மருத்துவமனை கொண்டு செல்ல, தர்மராஜ் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  அதன் பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.  வேலூர் வடக்கு போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TNTRANSPORT #SAD