உயிரிழந்து கிடந்த 'பெண்'.. 34 வருசமா கண்டுபிடிக்க முடியாம திணறிய போலீஸ்.. "மர்ம நபர் எழுதிய LETTER மூலமா தெரியவந்த உண்மை"..
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 34 ஆண்டுகளுக்கு முன் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து போன நிலையில், இதற்கான காரணம் என்பது பற்றி தற்போது தகவல் கிடைத்துள்ளது.
Also Read | கடலின் 400 அடி ஆழத்தில் புதைந்து கிடந்த 100 வருச 'மர்மம்'.. "இத்தனை நாளா இது தெரியாம போயிருச்சே"
Tamika Reyes என்ற பெண்மணிக்கு தற்போது 43 வயதாகிறது. அவருக்கு 9 வயது இருந்த சமயத்தில், அவரது தாயாரான Anna Kane உடல், கடந்த 1988 ஆம் ஆண்டு, மரக்கட்டைகளுக்கு நடுவே கழுத்தில் கயிறு கட்டப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால், அன்னாவின் குடும்பம் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இதற்கான காரணம் யார் என்பது குறித்து போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அன்னாவை வேறு இடத்தில் கொலை செய்து விட்டு, மரக்கட்டைகள் உள்ள பகுதியில் வீசியதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, அன்னா கேன் இறந்த செய்தி பற்றி, அங்குள்ள செய்தித் தாள் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது. தொடர்ந்து, கேன் இறந்து 15 மாதங்கள் கழித்து, அந்த செய்தித் தாள் நிறுவனத்திற்கு பெயர் குறிப்பிடாத ஒரு நபரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அதில், அன்னாவின் கொலையாளிக்கு மட்டுமே தெரியும் தகவல் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பல ஆண்டுகள் உருண்டு ஓடியதால், கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்காமல் இருந்து வந்தனர். இதனால், அன்னாவின் தாயார், மகள் Reyes, அவரது இரண்டு சகோதரர்கள் உள்ளிட்டோர் தவிப்பில் இருந்து வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், சுமார் 34 ஆண்டுகள் கழித்து, அன்னாவை கொலை செய்தது யார் என்பது பற்றியும், கூடவே இன்னொரு அதிர்ச்சி தகவலும் சேர்ந்து வந்துள்ளது.
DNA முறையை பயயன்படுத்தி கொலையாளி பற்றிய விவரத்தினை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, செய்தித் தாளுக்கு கடிதம் அனுப்பிய நபர், கடிதத்தின் உறையை நக்கியதால் அதிலிருந்த உமிழ் நீருடன் அன்னாவின் ஆடைகளில் இருந்த அடையாளம் தெரியாத நபரின் DNA பொருந்தியதால், குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தாயின் கொலையாளி யார் என்பது Reyes-ற்கு தெரிய வந்தாலும், ஏமாற்றம் தான் அவருக்கு காத்திருந்தது. இதற்கு காரணம், அன்னாவை கொலை செய்யப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட Scott Grim என்ற நபர், தனது 58 வயதில், இயற்கையாகவே கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அதே போல, இந்த வழக்கு தீர்வதற்கு முன்பாகவே, அன்னாவின் தாயார் உயிரிழந்த விஷயம், Reyes-ஐ இன்னும் வேதனைக்குள் ஆழ்த்தி இருந்தது.
ஆனால், அதே வேளையில் எந்த வழக்குகளிலும் தொடர்பு இல்லாத Scott Grim என்பவர். அன்னாவின் மரணத்தில் தொடர்புள்ள நிலையில், ஏன் அவர்களை கொலை செய்தார் என்பது தொடர்ந்து ஒரு மர்மமாகவே உள்ளது. மேலும், அன்னா மற்றும் ஸ்காட் ஆகிய இருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், எந்த காரணத்துக்காக அன்னாவை ஸ்காட் கொலை செய்திருப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், DNA தொழில்நுட்பம் மூலம் வேறு ஏதேனும் கொலைகளில் ஸ்காட்டிற்கு தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read | பாழடைந்த வீட்டில் நடந்த வேலை.. தொழிலாளி கண்ட பொருள்.. "வீட்டோட ஓனருக்கே இவ்ளோ நாள் தெரியாம போச்சே"