"உங்களை மாதிரி ஆகணும்.. சீக்ரட்டை சொல்லுங்க".. கேள்வி கேட்ட நெட்டிசன்.. ஒரே வார்த்தைல மஸ்க் கொடுத்த ரிப்ளை..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் நம்பர் 1 பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், தனது பிட்னஸ் குறித்து நெட்டிசன் ஒருவருக்கு அளித்த பலரையும் ஈர்த்திருக்கிறது.

Also Read | 600 கிலோ.. 6 நொடி.. தர்க்கப்பட்ட பிரம்மாண்ட பாலம்.. திகைக்க வைக்கும் வீடியோ..!
எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
கேள்வி
இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"வணக்கம் எலான் மஸ்க், நீங்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்கள். உங்களுடைய ரகசியம் என்ன? வெயிட் தூக்குகிறீர்களா? (Lifting weights) ஆரோக்கியமாக சாப்பிடுகிறீர்களா?" எனக் கேட்டிருந்தார். இந்த பதிவுக்கு மஸ்க் என்ன பதிலளிக்க போகிறார்? என நெட்டிசன்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ஒரே வார்த்தையில் ரிப்ளை கொடுத்திருக்கிறார் மஸ்க். தன்னுடைய பதிலில்,"விரதம் (Fasting)" எனக் குறிப்பிட்டிருக்கிறார் மஸ்க்.
முன்னதாகவே மஸ்க் பலமுறை தான் விரதம் இருப்பதாகவும் அதன்மூலம் 9 கிலோ வரையில் எடை குறைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், முன்னெப்போதையும் விட, தான் ஆரோக்கியமாக உணர்வதாக தெரிவித்திருந்தார். இதுபோல, ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Jack Dorsey-வும் தான் விரதம் இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Hey, @elonmusk what’s your secret? You look awesome, fit, ripped & healthy. Lifting weights? Eating healthy? pic.twitter.com/mYeOUOLvgH
— Eva McMillan ♥️ (@EvasTeslaSPlaid) October 1, 2022

மற்ற செய்திகள்
