600 கிலோ.. 6 நொடி.. தர்க்கப்பட்ட பிரம்மாண்ட பாலம்.. திகைக்க வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுனேவில் நேற்று இரவு பாலம் ஒன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புனேவின் சாந்தினி சவுக் பகுதியில் 90களில் கட்டப்பட்ட இந்த பாலம் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH4) சாந்தனி சவுக் பகுதியில் இருந்த இந்தப் பாலம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடிக்கப்பட்டது.
தகர்க்கப்பட்ட பாலம்
சாந்தினி சவுக் பகுதியில் மேம்பாட்டு பணிகளுக்காக அதிகாரிகள் திட்டமிட்ட நேரத்தில் இந்த பாலம் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இதனையடுத்து வெடிவைத்து இந்த பாலம் தகர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய இந்த பாலத்தை இடித்த எடிஃபைஸ் இன்ஜினியரிங் குழுமத்தின் இணை உரிமையாளர் சிராக் சேடா,"ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் கட்டுப்படுத்தப்பட்ட குண்டுவெடிப்பு மூலம் பாலம் இடிக்கப்பட்டது. திட்டமிட்டபடி அனைத்தும் செயல்படுத்தப்பட்டது. இப்போது, அந்த இடத்திலிருந்து குப்பைகளை அகற்ற இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறோம்" என்றார்.
600 கிலோ
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் எடிஃபைஸ் இன்ஜினியரிங் குழுமத்தினை சேர்ந்த அதிகாரிகள் மேம்பாலத்தை பார்வையிட்ட பின்னர், பாதுகாப்பு வசதிகள் குறித்த சோதனை நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து, அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பாலம் வெடிவைத்து தகர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பாலத்தில் எஞ்சியுள்ள இரும்பு கம்பிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுமார் 600 கிலோ வெடிமருந்துகளை உபயோகப்படுத்தி இந்த பாலம் இடிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹெலிகாப்டர் மூலமாக இந்த திட்டத்தை பார்வையிட்டிருக்கிறார். இந்த பாலம் தாங்கள் நினைத்ததை விட வலிமையாகவே இருந்ததாகவும், இருப்பினும் இந்த தகர்ப்பு முயற்சி வெற்றியடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த மேம்பாலம் வெடிவைத்து தகர்க்கப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#WATCH | Maharashtra: Rubble of demolished Pune's Chandni Chowk bridge laid bare along with a cloud of dust after the demolition
(Source: District Information Office Pune) pic.twitter.com/EwfQwwAm52
— ANI (@ANI) October 1, 2022
Also Read | கடைசி ஓவரில்.. தினேஷ் கார்த்திக் கிட்ட கோலி காட்டிய சைகை.. விஷயம் தெரிஞ்சு மனம் நெகிழ்ந்த ரசிகர்கள்!!