'டோஜ்காயின்' பத்தி எலான் மஸ்க் சொன்ன விஷயம்...! கொஞ்சம் நேரத்துல அதோட 'மதிப்பு' உயர்ந்திடுச்சு...! - பரபரப்பு பேட்டி...!
முகப்பு > செய்திகள் > வணிகம்பிட் காயினை விட டோஜ்காயின் மக்களின் தினசரி பரிமாற்றத்திற்கு சரியாக இருக்கும் என மீண்டும் ஒரு புரட்சியை கிளம்பி உள்ளார் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) எலான் மஸ்க்கை டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் ' வருடத்தின் தலை சிறந்த நபர்' என அறிவித்துள்ளது. அதன்பின் டைம்ஸ் இதழ் மூலம் எலான் மஸ்க்கிடம் நேர்காணல் நடைபெற்றது. அந்த நேர்காணலின் போது டோஜ்காயினைப் பற்றி கேட்டபோது அதற்கு எலான் மஸ்க் 'டோஜ் காயின்கள் பிட்காயினை விட தினசரி நிதிப் பரிமாற்றங்களுக்கு சரியான ஒரு காயினாக இருக்கும்' எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதற்கு முன் எலான் மஸ்க் பிட் காயினை குறித்து பேசியபோது அதனுடைய பாதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது. அதோடு அதனை பலர் வாங்கி பரிமாற்றம் செய்தும் வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் எலான் மஸ்க் பிட்காயினை கீழே இருக்கும்படி கூறிய இந்த செய்தி முதலீட்டாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, டோஜ்காயினை குறித்து எலான் மஸ்க் கூறிய பின் அதனுடைய மதிப்பு 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் அந்த நேர்காணலில் எலான் மஸ்க் தயாரிக்கும் டெஸ்லா கார்களை டோஜ்காயின்களை கொண்டு வாங்கலாம் என கூறியதோடு, நேர்காணலை தன்னுடைய டிவீட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதற்கு முன் டெஸ்லா கார்களை வாங்க பிட்காயின்களையும் பயன்படுத்தலாம் என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அந்த நேர்காணலின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் எலான் மஸ்க் 'மக்களின் தினசரி பரிவர்த்தனைகளுக்கு பிட்காயின் சரியாக இருக்காது. அதற்கு பதில் டோஜ்காயினைகளைக் கொண்டு மக்கள் அவர்களின் தினசரி பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை எளிதாக செய்யலாம்' எனக் கூறியிருந்தார்.
எலான் மஸ்க் இதனை புதிதாக கூறவில்லை, சில மாதங்களுக்கு முன் டோஜ்காயின் ”மக்களுக்கான காயின்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் டோஜ்காயினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் எலான் மஸ்க் 'இந்த வருடத்தின் சிறந்த நபர்' விருது பெற்றதற்காக வாழ்த்துகளை தெரிவித்தும் டோஜ்காயினுக்கு ஆதரவாக பேசியதற்கு நன்றி எனவும் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Tesla will make some merch buyable with Doge & see how it goes
— Elon Musk (@elonmusk) December 14, 2021