'அரசன்' ஆக ஆசை இருக்கா...? உடனே 'அப்ளை' பண்ணுங்க...! 'பீர் அபிஷேகமும் உண்டு...' - வினோத நடைமுறை...!
முகப்பு > செய்திகள் > உலகம்பீல் தீவின் முந்தைய மன்னரின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, புதிய ஆட்சி ஜூலை 2022-இல் தொடங்கப்பட உள்ளதாகவும், அதனை நிர்வகிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாகவும் பீல் கவுன்சிலின் கலாச்சார அமைப்பின் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆனால், இது ஒரு தற்காலிக நடைமுறையாக இருந்தாலும், அந்த தீவை பற்றிய சரியான புரிதல் உள்ள ஒருவரை தான் தேர்ந்தெடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதல் தேடுதல் படலம் தொடங்கும் என அந்த கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நான்கு மாதத்திற்குள் மன்னரை முடிவு செய்து ஏப்ரல் மாதத்தில் மன்னர் நியமனம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மன்னரை பீர் அபிஷேகம் செய்து ஜூலை மாதம் முதல் புதிய ஆட்சி தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஃபர்னஸ் தீபகற்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கவுன்சிலின் பார்வையாளர் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் தலைவரான சாண்ட்ரா பெய்ன்ஸ் இதுகுறித்து கூறும்போது, "தீவின் அழகு, அதன் இயற்கையான வாழ்விடத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்" என்று கூறினார்,
ஆனால் தீவில் மக்கள் வாழ்வதற்கு தேவையான சூழல்கள் குறைவாக உள்ளது. அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என கூறினார். அந்த திட்டங்கள் மக்களின் கனவாக மாறிடக் கூடாது எனவும், அதனை நாம் நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டது.
தீவைக் காப்பாற்ற தன்னார்வலர்கள் ஒரு மனுவை அளித்தனர், அப்போது அந்த மனுவில் தீவை "கிரீடத்தில் உள்ள நகை" என்றும் "நமது மரபின் முக்கிய பகுதி" என்றும் வர்ணித்தனர்.

மற்ற செய்திகள்
