இது லிஸ்ட்லயே இல்லையே..டெஸ்லா செல்போனை செவ்வாய் கிரகத்துக்கு கொண்டுபோய் யூஸ் பண்ணலாமாம்! அப்படி என்ன ஸ்பெஷல்
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்அமெரிக்கா: உலகின் புகழ் பெற்ற டெஸ்லா நிறுவனம் அதிக திறன் கொண்டு செல்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெஸ்லா மொபைல்:
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் 2003-ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தை தொடங்கினார். மின்சாரத்தினால் இயங்கும் கார்களை மட்டுமே இன்நிறுவனம் உருவாக்குகிறது. தற்போது மொடல் எஸ் (Model S) , மொடல் க்ஸ் (Modal X), மொடல் 3 (Modal 3) ஆகிய மின்சார கார்களை தயாரித்துள்ளது. இது தற்போது உலகின் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த வருடத்திற்காக கட்டப் போகும் வரியை எலான் மஸ்க் வெளியிட்டிருந்தார். அந்த பெரும் தொகையே அனைவருக்கும் தலை சுற்றும் விதமாக இருந்தது.
டெஸ்லா பை:
டெஸ்லா கார்கள் மட்டுமல்லாது விண்வெளி சோதனையிலும் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உலகளவில் முன்னணி நிறுவனமான 'டெஸ்லா பை' என்ற செல்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க்கின் சேட்டிலைட் பிராட்பேண்ட் நிறுவனமான 'ஸ்டார்லிங்க்' உடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் மூலம் செல்போனில் இணையதள வசதி உள்ளிட்டவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இதைத் தவிர அனைத்து தொழில்நுட்பத்திலும் பல வருடங்கள் முன்னோக்கி செல்லும் விதமான அட்வான்ஸ் தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ளது.
சோலார் சார்ஜர்:
அதோடு, டெஸ்லா அறிமுகபடுத்தவிருக்கும் செல்போனில் பொருத்தப்பட்டிருக்கும் சூரிய ஒளி தகடின் உதவியுடன், சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வாடிக்கையாளர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்ப விரும்பிகளிடையே பெரும் வியப்பை உருவாக்கியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உபயோகிக்கலாம்:
தற்போது செவ்வாய் கிரகத்திற்கு தனது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தை அனுப்புவதை எலான் மஸ்க் கனவுத் திட்டமாக கொண்டிருந்தார். இந்த 'டெஸ்லா பை' போனை அங்கும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த மேலும் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
