ஒரே நாளில் 2.50 லட்சம் கோடி வருமானம் – உலகப் பணக்காரர்களை எல்லாம் திகைக்க வைத்த எலான் மஸ்க்..
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் எலான் மஸ்க், சமீபத்தில் செய்த சம்பவம் சக உலக பணக்காரர்களையே திகைக்க வைத்திருக்கிறது.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களை உருவாக்கியவரும் அதன் அந்நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் இந்தப் புத்தாண்டில் புதிய சாதனை ஒன்றினைப் படைத்துள்ளார். இந்தாண்டு துவக்கத்தில் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது.
புதிய ஆர்டர்
எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து வரும் டெஸ்லா நிறுவனத்திடம் இருந்து ஒரு லட்சம் கார்களை வாங்குவதாக ஹெர்ட்ஸ் க்ளோபல் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் மதிப்பு தாறுமாறாக ஏறியிருக்கிறது. இந்த விற்பனை மூலமாக 36.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 25,13,41,87,00,000 ரூபாய்) எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது ஹெர்ட்ஸ் நிறுவனம். அதாவது 2.50 லட்சம் கோடி வருமானத்தை எலான் மஸ்க் ஈட்டியுள்ளார்
இதனால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இவர் இந்த புதிய டீல் மூலமாக தனது வளத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆறுமாத காலமாக எலெக்ட்ரிக் கார் டெலிவரியில் தொடர்ந்து உலகளவில் முதலிடம் வகிக்கும் டெஸ்லா, ஹெர்ட்ஸ் உடனான வியாபாரம் நடைபெற்ற நாளில் மட்டும் அந்நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 13.5 சதவீதம் ஏற்றம் கண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 1199.8 அமெரிக்க டாலர்களாக வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம்
கடந்த ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த எலான், 304.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் பட்டியலில் முதலிடத்திலேயே தொடர்கிறார். பிரான்சைச் சேர்ந்த பேஷன் பொருட்கள் உற்பத்தியாளரான பெர்னார்ட் அர்னால்ட் 203.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசொஸ் 193.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

மற்ற செய்திகள்
