ஓப்பனா சொல்லிடுறேன்...! நீங்க 'இத' பண்ணலன்னா... 'கம்பெனிய இழுத்து மூட வேண்டியது தான்...' - எலான் மஸ்க் காட்டம்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Issac | Dec 03, 2021 10:33 PM

வாரத்தின் ஏழு நாட்கள் வேலை செய்யாவிட்டால் கம்பெனியை மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும் என எலான் மஸ்க் கூறிய சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Elon Musk says SpaceX will go bankrupt if not work hard

'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் நிறுவனரும், பணக்காரார் பட்டியலில் இருக்கும் எலான் மஸ்க் அனைத்து துறைகளிலும் கலக்கி வருகிறார். இதில் முக்கியமானது விண்வெளி வீரர்கள் அல்லாத சாதாரண மக்களையும் விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் திட்டம்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஏற்கனவே 3 முறை விண்வெளிக்கு பலரை சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. இப்போது செவ்வாய் கிரகத்துக்கும், நிலவுக்கும் ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகளை எலான் மஸ்க் செய்து வருகிறார்.

இதற்கேன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 'ராபர்ட்' என்ற ராக்கெட் இன்ஜினை தயாரித்து வருகிறது. இந்த ராபர்ட் இன்ஜினை பயன்படுத்தி, ஒரே நாளில் செவ்வாய், நிலவுக்கு செல்லும் வகையில் திட்டமிடபட்டுள்ளது.

இது கோவா பாண்டிச்சேரி செல்லும் டூர் போல இல்லாமல் பல ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் எலான் மஸ்க் தன் நிறுவன ஊழியர்களுக்கு கடந்த வாரம் இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், 'நம் நிறுவனம் செய்து கொண்டிருக்கும் காரியம் சாதாரணமானது இல்லை. மனிதர்களை நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் அழைத்து செல்ல முக்கிய பங்கு வகிக்கும் ராப்டர் ராக்கெட் இன்ஜினின் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வந்தன.

இதில் நம் நிறுவனத்தில் முன்பிருந்த மூத்த அதிகாரிகள் சிலர் வெளியேறியதால் ராப்டர் இன்ஜின் தயாரிப்பு பணியை தொடர்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதில் துரதிருஷ்டவசமாக கடந்த வாரம் இருந்ததை காட்டிலும், இப்போது மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

இதை மறைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இனி வார இறுதி நாட்களில் விடுமுறை எடுக்காமல், இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து இந்த இன்ஜின் தயாரிப்பை பணியை முடிக்கவில்லை என்றால், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் திவால் நிலைக்கு சென்று விடும்.

கடுமையான இந்த சூழலில் நிறுவனத்தினர் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். விண்கலத்துக்கு தேவையான, நம்பகமான ராப்டர் இன்ஜின்களை போதுமான அளவில் தயாரிக்காவிட்டால், நட்சத்திர இணைப்பு செயற்கைகோள்களான வி-2, வி-1ஐ விண்வெளிக்கு அனுப்ப முடியாது' எனக் கூறிப்பிட்டுள்ளார்.

Tags : #ELON MUSK #SPACEX

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elon Musk says SpaceX will go bankrupt if not work hard | Business News.