12 நாட்கள் விண்வெளி பயணம் செய்த டாப் கோடீஸ்வரர்… எதுக்குனா தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் (பில்லியனர்) யுசாகு மேசாவா. ஃபேஷன் துறையில் மிகப் பெரிய ஜாம்வானாக திகழ்பவர் 46 வயதாகும் மேசாவா.

வெறுமனே பணம் சம்பாதிப்பதில் மட்டும் நாட்டம் கொண்டவர் அல்ல யுசாகு மேசாவா. விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் விண்வெளிப் பயணங்களில் அதிக விருப்பம் உடையவர். வரும் 2023 ஆண்டு உலகின் நம்பர் 1 பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் சார்பில் நிலவைச் சுற்றி ஓர் விண்வெளிப் பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது. அதில் மேசாவாவும் செல்ல இருக்கிறார். அதற்கு முன்னோட்டமாகவே இந்த 12 நாள் விண்வெளிச் சுற்றுலாவை முதலில் முடித்துள்ளார் மேசாவா.
'ஸ்பேஸ் சுற்றுலா' என்கிற புதிய பொழுதுபோக்கு உலகப் பணக்காரர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அதற்கு தூபம் போட்டவர் எலான் மஸ்க் தான். இதனால் பல பணக்காரர்கள் விண்வெளிக்குச் செல்வதையும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று வருவதையும் தங்களின் ஆசைகளில் ஒன்றாக வைத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி, கஸகஸ்தானின் பைகோனூரில் இருந்து விண்வெளிக்குப் புறப்பட்டார் யுசாகு மேசாவா. அவரது அசிஸ்டென்ட் யோசு ஹிரானோவும் மேசாவாவுடன் விண்வெளிக்குப் புறப்பட்டார். 12 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேசாவா முகாமிட்டிருந்தார்.
அங்கு தங்கியிருந்த போது, தனது சமூக வலைதளங்களில் விண்வெளிக்கு வருவது எப்படி இருக்கிறது, அங்கு எப்படி டீ போடுவது, விண்வெளியில் தங்குவதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பன குறித்து தொடர்ந்து வீடியோக்களைப் பதிவேற்றி வந்தார். ஜப்பானில் மிகவும் பிரபலமான மேசாவாவின் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வந்தன.
இந்நிலையில் கஜகஸ்தானில் இருந்து தனது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார்.

மற்ற செய்திகள்
