'ஒரு கையெழுத்துக்கு இத்தனை பேனாக்களா?'... 'டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்!'... 'அமெரிக்காவில் பரபரப்பு'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jan 17, 2020 01:03 PM

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவி நீக்கம் தொடர்பான தீர்மானத்தில், பல பேனாக்கள் பயன்படுத்தி கையெழுத்திடப்பட்டுள்ளன.

Nancy Pelosi uses multiple pens to sign the impeachment

அமெரிக்கப் பாராளுமன்றத்தின் கீழ் அவையில், அதிபர் டிரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், பாராளுமன்ற கீழ் அவையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, பதவி நீக்கத் தீர்மானத்தில் கையொப்பமிடும் போது பல பேனாக்கள் பயன்படுத்தியது சர்ச்சையாகி உள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அமெரிக்க காங்கிரஸை அவமதித்தல் ஆகிய டிரம்ப்புக்கு எதிரான இரு தீர்மானங்களில், பெலோசி கையெழுத்திட்டார்.

அரசாங்கத்தின் முக்கியமான கொள்கை முடிவுகள், வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவங்கள் போன்ற தருணங்களில், பல பேனாக்கள் பயன்படுத்தப்படுவது அமெரிக்க நிர்வாகத்தில் வாடிக்கையாக இருந்து வருகிறது. கையெழுத்திட பயன்படுத்திய பேனாக்கள், செய்தியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் நான்சி, பதவி நீக்கத் தீர்மானத்தில் மகிழ்ச்சியுடன் கையெழுத்திட்டுள்ளார்.

Tags : #TRUMP #IMPEACHMENT