2022 ஆரம்பமே இப்படியா..! டெல்டா-ஒமைக்ரான் கலவையாக உருவான ‘புதிய’ வைரஸ்?.. எந்த நாட்டுல தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்மரபணு மாற்றம் கொண்ட புதிய வைரஸ் சைப்ரஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 54 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 30 கோடிக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. முன்னதாக டெல்டா வகை வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஒமைக்ரான் என்ற உருமாறிய வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதனால் பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனாவின் மரபணு மாற்றம் கொண்ட மற்றொரு புதிய வைரஸ் சைப்ரஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா மற்றும் ஒமைக்ரான் கலவையாக இந்த புதிய வைரஸ் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு ‘டெல்டா கிரான்’ (Deltacron) என பெயரிட்டுள்ளனர்.
ஒமைக்ரான் மற்றும் டெல்டாவின் பாதிப்புகள் இதில் இருக்கும் என்று சைப்ரஸ் பல்கலைக்கழக நுண்ணுயிரி மருத்துவத்துறை அறிவித்துள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்டவர்களில் 25 பேருக்கு இத்தகைய புதிய வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வைரஸ் குறித்து ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
