தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை.. புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை : தமிழகத்தில், கொரோனா பரவல் வேகமாக இருப்பதால், சில அறிவிப்புகளை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று பரவல், பல நாடுகளில் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவிலும், கொரோனா தொற்று பரவல், பல மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அது மட்டுமில்லாமல், இன்னொரு பக்கம் ஒமைக்ரான் தொற்றின் பரவலும் அதிகம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக அரசு நடவடிக்கை
இதனால், இந்தியாவின் பல மாநில அரசுகள், இரவு நேர ஊரடங்கு தொடங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதே போல, தமிழகத்திலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
முன்னதாக, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், நேற்று மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழகத்தில் சில கூடுதல் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது பற்றி, ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். அத்தியாவசிய தேவை இல்லாமல், மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை
அதே போல, தமிழக கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு தளங்களுக்கு செல்லவும் தடை விதிக்கபட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு?
அதே போல, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல இரவு நேர ஊரடங்கானது, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, துணிக்கடைகள், உணவகங்கள், விடுதிகள் ஆகியவற்றில் 50 % வாடிக்கையாளர்களுக்கு தான் அனுமதி என அறிவித்திருந்தது. அந்த நிலை தற்போதும் தொடர்கிறது
மேலும், பொழுது போக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
