ஒமைக்ரானை தொடர்ந்து ‘அடுத்து’ ஒன்னு வரும்.. அது இன்னும் ‘கடுமையா’ இருக்கும்.. இந்திய வம்சாவளி விஞ்ஞானி தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒமைக்ரானை தொடர்ந்து புதிய வகை வைரஸ் வரக்கூடும் என இந்திய வம்சாவளி விஞ்ஞானி கூறியுள்ளார்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே உருமாறிய டெல்டா வகை வைரஸ் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோன வைரஸ், தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதனால் பல்வேறு நாடுகளில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி விஞ்ஞானியான ரவீந்திர குப்தா தகவல் ஒன்று தெரிவித்துள்ளார். அதில், ‘கொரோனா தடுப்பு ஊசி அதிகமாக செலுத்துப்பட்ட கால சூழலிலும் வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வந்தது. அது லேசாக உள்ளது என்பதற்கான எந்த காரணமும் இல்லை. அதனால் இதை ஒரு பரிணாம பிழை என நான் நினைக்கிறேன். அடுத்து வரும் புதிய வைரஸ் மிகக் கடுமையாக இருக்கும். புதிய வகை கொரோனா வைரஸ் ஒமைக்ரானின் பண்புகளை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
அதனால் தடுப்பூசி செலுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பில் நமக்கு அரணாக இருப்பது தடுப்பூசி மட்டுமே’ என ரவீந்திர குப்தா தெரிவித்துள்ளார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்க்கான பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
