11 தடவை கொரோனா தடுப்பூசி போட்ட தாத்தா.. ப்ளீஸ் போட்டுக்கிட்டே இருங்க.. ரொம்ப பிடிச்சிருக்கு.. கொரோனா தடுப்பூசி மேல் காதல்
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார்: பீகார் மாநிலத்தில் 84 வயது முதியவர் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் மதிபுரா மாவட்டம் ஓரை கிராமத்தை சேர்ந்தவர் பிரமோதிய மண்டல். 84 வயதாகும் இவர் அஞ்சல் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார். இவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்.
பல ஆவணங்களை காட்டி தடுப்பூசி போட்டுள்ளார்:
மார்ச் மாதம் போடத் தொடங்கியவர் தொடர்ச்சியாக மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என அடுத்தடுத்து பிரமோதிய மண்டல் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். பல முறை இவர் தனது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட தன்னிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் காட்டிக்கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். வெவ்வேறு நேரங்களில் தனது செல்போன் எண், மனைவி, உறவினர்களின் செல்போன் எண்களை கொண்டு தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்துள்ளார்.
ஆவணங்களை பரிசோதித்த ஊழியர்கள் அதிர்ச்சி:
கடந்த டிசம்பர் 30-ம் தேதி 11-வது முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக பிரமோதிய மண்டல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரமோதிய மண்டல் பனிரெண்டாவது முறையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனது கிராமத்திற்கு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்றைய தினம் போயுள்ளார். அப்போது, அவரது ஆவணங்களை சோதித்த சுகாதாரத்துறை ஊழியர்கள் மண்டல் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியுள்ளார் என்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
சிறப்பாக உணர்கிறேன்:
இது பற்றி சுகாதாரத்துறையினர் அவரிடம் விசாரித்தபோது, தான் ஏற்கனவே 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும், இது தனக்கு பனிரெண்டாவது கொரோனா தடுப்பூசி எனவும் கூறு சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு முறை கொரோனா தடுப்பூசி போடும்போதும் சிறப்பாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த அதிர்ச்சி தகவலை அறிந்த சுகாதாரப்பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு 84 வயதான முதியவர் பிரமோதிய மண்டல் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தியதுது உண்மைதானா? என்பது குறித்து விசாரிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவு போட்டுள்ளார்.
பிரமோதிய மண்டலுக்கு 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது உண்மை என்பது உறுதியானால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.