தண்ணீர்த் தொட்டிக்குள் கோடி கோடியாக பணம்... ஐடி ரெய்டில் சிக்கிய தொழிலதிபர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Rahini Aathma Vendi M | Jan 09, 2022 05:43 PM

மத்தியபிரதேசம் மாநிலத்தில் தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

lots of money found in the water tank of a businessman

மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சங்கர் ராய். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர்.

lots of money found in the water tank of a businessman

அப்போது சங்கர் ராய் வீட்டு தண்ணீர் தொட்டிக்குள் கோடிக்கணக்கில் பணம் குவிந்து கிடந்துள்ளது. தண்ணீர்த் தொட்டிக்குள் 500 ரூபாய் நோட்டுகள் ஆக சுமார் 1 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அவரது வீட்டில் பல இடங்களில் இருந்தும் 2,000 ரூபாய் நோட்டுகளும் 500 ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கூடுதலாக, பல இடங்களில் இருந்தும் தங்க பிஸ்கட்டுகளும் கிடைத்துள்ளன. மொத்தமாக இவரது வீட்டில் 39 மணி நேரம் ஐடி ரெய்டு நடந்துள்ளது. மொத்தம் தண்ணீர் தொட்டிக்குள் 1 கோடி ரூபாய், வீட்டின் இதர இடங்களில் இருந்து 8 கோடி ரூபாய் எனக் கைப்பற்றப்பட்டிள்ளது.

Tags : #MONEY #MONEY IN WATER TANK #MADHYAPRADESH #ஐடி ரெய்டு #கோடி கோடியாகப் பணம் #தொழிலதிபர்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Lots of money found in the water tank of a businessman | India News.