'எப்படியெல்லாம் யோச்சிக்கிறாங்க..?'- புதுச்சேரியில் இருந்து நூதன முறையில் மதுபானம் கடத்தியவர் கைது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Rahini Aathma Vendi M | Jan 09, 2022 05:03 PM

புதுச்சேரியில் இருந்து நூதன முறையில் கடலூருக்கு மதுபானம் கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

man who smuggled liquor from puducherry to cuddalore was arrested

கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில் தற்போது தமிழகத்தில் 5 நாட்கள் டாஸ்மாக் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.

man who smuggled liquor from puducherry to cuddalore was arrested

சுற்றறிக்கையில் ஜனவரி 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26-ந்தேதி குடியரசு தினம் என்பதால், மேற்கண்ட நாட்கள் மதுபானம் விற்பனையில்லா தினங்களாக அனுசரிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற ‘பார்’களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

man who smuggled liquor from puducherry to cuddalore was arrested

தமிழகத்தில் வருகிற 9 மற்றும் 16-ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே அப்போது ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இந்த மாதத்தில் 5 நாட்கள் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக புதுச்சேரிக்குச் சென்று அங்கிருந்து மதுபானங்களை வாங்கி கடலூருக்கு கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வித்தியாசமாக ப்ளாஸ்டிக் பாக்கெட்டுகளில் மதுவை ஊற்றி அதை உடலோடு இணைத்து ஆடை போல் வடிவமைத்து ஆணிந்து கொண்டுள்ளார். இப்படி கடத்தி தற்போது போலீஸாரால் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

Tags : #CUDDALORE #மதுபானம் #மது கடத்தல் #புதுச்சேரி #PUDUCHERRY #LIQUOR SMUGGLING #LOCKDOWN

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man who smuggled liquor from puducherry to cuddalore was arrested | Tamil Nadu News.