தோல், நகம், உதடுகளைக் கவனியுங்கள்.. இதெல்லாம் இருந்தால் ஒமிக்ரானாக இருக்கலாம் – மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jan 06, 2022 12:29 PM

உலகம் முழுவதும் ஒமிக்ரான் வேரியன்ட் காட்டுத்தீ போல பரவிவருகிறது. அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை 10, லட்சத்தைத் தொட்டது. இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவும் வேகம் கவலையளிப்பதாக உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது.

These are the New Symptoms of Corona says United States CDC

பொதுவான அறிகுறிகள்

இந்நிலையில் இருமல், சளித்தொல்லை, தொண்டை வறண்டு போதல், தலைவலி, லேசான காய்ச்சல், சதைகள் வலி, மூட்டுகளில் வலி, உடல் சோர்வு ஆகிய எட்டு அறிகுறிகளும் ஒமிக்ரான் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு பொதுவாக ஏற்பட்டுவருகிறது.

These are the New Symptoms of Corona says United States CDC

இந்நிலையில் The Zoe எனும் கொரோனா சோதனை அமைப்பு நடத்திய சமீப ஆய்வில் இரண்டு புதிய ஒமிக்ரான் அறிகுறிகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, வாந்தி மற்றும் பசியின்மை ஆகிய அறிகுறிகள் ஒமிக்ரானாக இருக்கலாம் என அந்த ஆய்வு கூறுகிறது.

ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறதா..? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்..!

 

These are the New Symptoms of Corona says United States CDC

புதிய அறிகுறிகள்

இதனிடையே அமெரிக்காவைச் சேர்ந்த நோய்க்கட்டுப்பாட்டு இயக்குனரகமான சிடிசி, ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில புதிய அறிகுறிகள் தோன்றலாம் என அறிவித்துள்ளது. இதன்படி உதடு, தோல் மற்றும் நகத்தில் சில அறிகுறிகள் தோன்றலாம். அதாவது சிலருக்கு தோல் நீல நிறத்தில் மாற்றமடையும் எனவும் உதடு மற்றும் நகம் வெளுத்துப்போகவோ அல்லது நீல நிறத்திற்கு மாறவோ வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

These are the New Symptoms of Corona says United States CDC

வெள்ளை நிறத்தோல் கொண்டவர்களுக்கு நீல நிறமாக மாறும் எனவும் கறுப்பு நிறத் தோல் கொண்டவர்களுக்கு தோல் வெளுத்துப்போகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது இம்மாதிரியான பிரச்சனையை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இட்லி மாவு தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.507 கோடி முதலீடு செய்த ‘Wipro’ நிறுவனர்.. அசர வைக்கும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தின் பின்னணி..!

சுவாசத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதை உடனடியாக கண்டறிய முடியாது. ஆகவே, உங்களது உடலில் மேற்குறிப்பிட்டபடி உதடு, தோல் மற்றும் நகங்களில் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகும்படி தெரிவித்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Tags : #COVID19 #OMICRON #CDC REPORT #கொரோனா #ஒமிக்ரான்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. These are the New Symptoms of Corona says United States CDC | World News.