இந்தியாவில் உள்ள இந்த இடத்தை பார்த்து இதயத்தை தொலைத்த நார்வே தூதரக அதிகாரி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pandidurai T | Jan 09, 2022 03:39 PM

இந்தியா:  நார்வே தூதரக அதிகாரியான எரிக் சொல்ஹெய்ம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பிரஷர் ஏரியின் புகைப்படத்தை ட்வீட் செய்து இதயத்தை தொலைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

Erik Solheim tweeted a photo of Himachal Pradesh Parashar Lake

தமிழீழ விடுதலைப் போரில், மேற்கு ஐரோப்பிய நாடான நார்வே சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சண்டை சச்சரவுகளை சற்றும் விரும்பாத நார்வே மக்கள், உலகில் எங்கே போர் நடந்தாலும் அதனை விரும்புவதில்லை. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதையே இலக்காகக் கொண்டு இயங்கும் அரசுகளைக் கொண்டவை மேற்கு ஐரோப்பிய நாடுகள்.

Eric Solheim tweeted a photo of Himachal Pradesh Parashar Lake

இலங்கை இராணுவம் கண் மூடித்தனமாக குண்டு வீச்சுகள் மற்றும்  தாக்குதல்களை நடத்தியதில் பொதுமக்கள் உயிரிழந்ததாக இலங்கைக்கான நார்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ஹெரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார். அந்த வகையில் நார்வே மக்கள் போரை விரும்புவதில்லை என்பதும் உலகமே அறிந்த விசயம். உலகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் நார்வே முதலிடம் வகிக்கிறது.   கற்பனைக்கும், இயற்கைக்கும் தனது கட்டுப்படுத்த முடியாத அழகான செயல்களை ரசிக்கக் கூடியவர் நார்வே தூதரக அதிகாரி சொல்ஹெய்ம்.

Erik Solheim tweeted a photo of Himachal Pradesh Parashar Lake

எப்போதும் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்புடன் இருக்கும் அவர், கடந்த முறை ஒரு நிலையான மற்றும் சுற்று சூழலை உருவாக்குவதற்கான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான வழியை ட்வீட் செய்தார். அந்த ட்விட்டில் இடம்பெற்றிருந்த புகைப்படைத்தை கண்ட இந்தியர்கள் பலரும் வரவேற்றனர். ஒரு கோப்பையில் ஐஸ்கிரீம் இருப்பது போன்ற புகைப்படம், பலருக்கும் பரீட்சையமானது.

அவை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சாதாரண ஐஸ்கிரீம் கப்பில் இல்லாமல், வாழை இலைகளில் இருந்து தயாரிக்கப்படுவதை தெரிவித்திருந்தார். அதேபோன்று இந்தியாவில் இருக்கும் ரகசியங்களை தெரியப்படுத்துவதுபோல் அவரது மனக்கட்டுப்பாடுகளை உடைக்கும் இயற்கையின் அழகை இந்தமுறை வெளிக்காட்டியுள்ளார். நாம் அனைவரும் படித்து, புகைப்படங்களில் கண்டு சிலாகித்த இடம்தான் இருந்தாலும், பிறநாட்டவரோ, தலைவர்கள் குறிப்பிடும்போது நம்மை இன்னும் வசீகரிக்கிறது.

அதன்படி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஏரிகளின் புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பதிலளித்து வருகின்றனர். செம அழகான இடமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். எரிக் சொல்ஹேய்ம் ட்விட்டர் பக்கத்தில் உள்ள இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Eric Solheim tweeted a photo of Himachal Pradesh Parashar Lake

கோடைக்காலத்தில் சில நாட்கள் மட்டும் வெப்பத்தின் கடுமையில் இருந்து தப்பிக்கவும், உற்சாகம் அடைய சிறந்த வழி குளிர்மலைகளுக்கு பயணிப்பது. இமயத்தின் சாரலில் அமைந்திருக்கும் வட மாநிலங்களில் நிறைய குளிர் மலைகள் இருந்தாலும், இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் அமைந்திருப்பது  இவற்றை நிதானமாக கண்டு ரசிக்கலாம்.  நார்வே தூதரக அதிகாரி இதனை தெரிவித்த பின்னர் இந்தியர்கள் பலரும் இந்த இடத்திற்கு செல்ல ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Tags : #ERIKSOLHEIM #HIMACHALPRADESH #TWITTER #INDIA #PRASHAR LAKE #VIRALPHOTO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Erik Solheim tweeted a photo of Himachal Pradesh Parashar Lake | India News.