ஒமைக்ரானோட 'பவரு' உங்களுக்கு புரியல இல்ல..? WHO வின் எச்சரிக்கைய கேளுங்கப்பா
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெனிவா: இனியும் ஒமைக்ரான் வைரஸை லேசாகக் கருதுவது தவறு என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகம் முழுதும் ஒமைக்ரான் வைரஸ் அதிகளவில் பரவி தன் ஆட்டத்தை தொடங்கிவிட்டது. முதலில் இந்த ஒமைக்ரான் வைரசால் உயிர் பாதிப்பு அதிகளவில் ஏதும் பதிவாகவில்லை. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் ஒமைக்ரான் வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெட்ரோஸ் அதோனம் எச்சரிக்கை:
அவர் கூறியதாவது, 'தற்போது உலகம் முழுவதும் ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவிவருகிறது. முந்தைய டெல்டா வைரஸை அடக்கி இதன் பரவல் மேலோங்கி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸின் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியில் ஒமைக்ரான் வைரஸ் டெல்டாவை ஒப்பிடும்போது சற்றே மிதமான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் கூட முற்றிலுமாகவே இந்த வைரஸை மிதமானது என்று வகைப்படுத்தி விடக்கூடாது.
ஒமைக்ரான் வைரஸ் சுனாமி போல் உலகை அச்சுறுத்தி மருத்துவக் கட்டமைப்புக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மட்டும் உலகம் முழுவதும் 9.5 மில்லியன் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லாத்துக்கும் காரணம் அந்த நாட்கள்:
ஒமைக்ரான் வைரஸ் பரவ அதிக காரணம் வளர்ந்த நாடுகள் தான். ஏனென்றால், தடுப்பூசி சமத்துவமின்மை. இது புதிய வகை வைரஸ்கள் உருவாகும். 2022-ல் உலா நாடுகள் தடுப்பூசிகளை புத்திசாலித்தனமாக வசதியற்ற நாடுகளுக்குப் பகிர வேண்டும்.
10% மக்களுக்குக் கூட தடுப்பூசி செலுத்தவில்லை:
ஒவ்வொரு நாட்டிலும் 2021 இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் 40% மக்களாவது தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ள 194 நாடுகளில் 92 நாடுகள் இந்த இலக்கை எட்டவில்லை. 36 நாடுகள் 10% மக்களுக்குக் கூட தடுப்பூசி செலுத்தவில்லை.
இனி 2022-ல் ஒவ்வொரு நாட்டிலும் 70% மக்களாவது முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில நாடுகள் பூஸ்டர் டோஸ்களை வரிசைக்கட்டி செலுத்துவதால் இந்தப் பெருந்தொற்று நிச்சயமாக முடிவுக்கு வராது' என டெட்ரோஸ் அதோனம் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
