உலகிலேயே 'அதிக' இழப்பு 'இவருக்கு' தான்... 'கொரோனா' முடக்கத்தால்... 'பில்லியனருக்கு' ஏற்பட்ட 'பெரும்' பாதிப்பு...
முகப்பு > செய்திகள் > உலகம்ஐரோப்பாவைச் சேர்ந்த பில்லியனரான பெர்னார்டு அர்னால்டு கொரோனாவால் மிகப் பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ளார்.
ஐரோப்பாவிலுள்ள மிகப் பெரிய நிறுவனமான பெர்னார்டு அர்னால்டின் LVMH மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலான உலக நாடுகள் முடங்கியுள்ளதால், இந்த நிறுவனத்தின் பங்குகள் 19 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்து 2,28,000 கோடி ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது.
இதையடுத்து உலகிலேயே கொரோனா பாதிப்பு முடக்கம் காரணமாக அதிகபட்ச பொருளாதார இழப்பை சந்தித்துள்ள நபராக பெர்னார்டு அர்னால்டு மாறியுள்ளார். மேலும் கடந்த 6ஆம் தேதி நிலவரப்படி, அமேசான் உரிமையாளர் ஜெப் பிசோஸுக்கு கிடைத்துள்ள லாபத்தின் அதே அளவுக்கு பெர்னார்டு அர்னால்டு இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.