'அந்த இரண்டும் சவாலானது’... ‘கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்’... ‘மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 08, 2020 09:11 PM

கொரோனா வைரஸுடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

people must learn to live with the virus follow prevention

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளிமாநிலங்களில் மாட்டிக்கொண்ட  புலம்பெயர்ந்த தொழிலாளர்களை. மத்திய அரசு கடந்த 1-ந்தேதியில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனுமதி அளித்தது. அதேவேளையில் கொரோனா தொற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது, ‘நாம் ஊரடங்கு தளர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது ஆகிய இரண்டு பணிகளை பற்றி பேசி வருகிறோம்.

இரண்டும் மிகவும் சவாலானது. அதனால் நாம் கொரோனா வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நாம் வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும்போது வழிகாட்டுமுறைகள் மிகமிக முக்கியம். வைரஸிலிருந்து தன்னைத்தானே ஒருவர் காப்பாற்றிக்கொள்ள, சமூக பழக்க வழக்க மாற்றத்தை பின்பற்ற வேண்டும். இது மிகப்பெரிய சவால். இதற்கு மக்கள் ஆதரவு தேவைப்படுகிறது’ என லாவ் அகர்வால் கூறினார்.

மேலும், இந்தியாவில் 216 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை என்று கூறியதுடன், கொரோனா சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 5200 ரயில் பெட்டிகளை, ரயில்வேத்துறை தயார் செய்து வருவதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONAVIRUS