தினசரி 2 ஜிபி , 'அன்லிமிடெட்' கால்ஸ், இலவச எஸ்.எம்.எஸ்... அசத்தல் திட்டத்தை 'அறிமுகம்' செய்த நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றான ஜியோ புதிதாக வருடாந்திர பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கால் தற்போது நெட்வொர்க் நிறுவனங்கள் மிகுந்த லாபம் கண்டு வருகின்றன. இந்தியா முழுவதும் உள்ள பணியாளர்கள் தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். இதனால் டேட்டா என்பது அவர்களுக்கு மிகுந்த அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. இதை மனதில் கொண்டு நாள்தோறும் புதிய திட்டங்களை நெட்வொர்க் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
அந்த வகையில் ஜியோ நிறுவனம் 2 வருடாந்திர பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 2399 ரூபாய் திட்டத்தின் கீழ் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை ஒரு வருடத்திற்கு வழங்கப்படும். இதேபோல மற்றொரு திட்டமான 2121 திட்டத்தின் கீழ் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை 336 நாட்களுக்கு வழங்கப்படும்.
