19 வயது வித்தியாசம்.. காதலிச்சு திருமணம் செஞ்ச 'ஜோடி'.. பொண்ணோட அம்மா'வ பாத்ததும் மாப்பிள்ளைக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 16, 2022 07:11 PM

தன்னை விட 19 வயது குறைந்த பெண் ஒருவரை நபர் திருமணம் செய்திருந்த நிலையில், அவர் பற்றி தெரிய வந்த தகவல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

couple with 19 year age gap realised he meet his wife as a baby

Also Read | கரணம் அடித்த 'கபடி' வீரர்... ஆர்ப்பரித்த மக்கள்.. அடுத்த ஒரு சில வினாடிகளில் நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்!!

இங்கிலாந்தின் Staffordshire என்னும் பகுதியை சேர்ந்தவர் Rich Tomkinson. 48 வயதாகும் இவர், தன்னை விட 19 வயது குறைவான Evie என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு, Pub ஒன்றில் பணிபுரிந்து வரும் போது சந்தித்துள்ளதாக கூறபடுகிறது.

ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த இவர்கள், நாட்கள் செல்ல செல்ல காதலிக்கவும் தொடங்கி உள்ளனர். இருவருக்கும் இடையே உள்ள வயது இடைவெளி என்பதை ரிச் மற்றும் ஈவி ஆகிய இருவரும் பெரிதாக பொருட்படுத்தவே இல்லை.

couple with 19 year age gap realised he meet his wife as a baby

தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக வாழ்ந்து வந்த ரிச் - ஈவி ஜோடி, கடந்த ஜூலை மாதம் திருமணமும் செய்துள்ளது. வயது வித்தியாசம் என்பதை தாண்டி, திருமணத்திற்கு பின்னரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவர்கள் இருவருக்கும் கடும் இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

தனது மனைவி ஈவியை Pub ஒன்றில் முதல் முதலாக பார்த்ததாக தான் ரிச் கருதிக் கொண்டு இருந்துள்ளார். ஆனால், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர் என்ற விஷயம், கடும் ஆச்சரியத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளது.

couple with 19 year age gap realised he meet his wife as a baby

தங்களின் திருமணத்திற்கு பின்னர், ஈவியின் தாயான சாரா ஓவென் என்பவரை முதல் முறையாக ரிச் சந்தித்துள்ளார். அப்போது தான், 1990 களில் சாரா வேலை செய்த தெருவில் தானும் வேலை செய்து வந்ததை ரிச் உணர்ந்துள்ளார். ஏற்கனவே, பழக்கமான மனைவி ஈவியின் தாய் பற்றி அறிந்து கொண்டதும், சிறு வயதில் தனது மனைவி குழந்தையாக இருக்கும் போது அவருடன் விளையாடியதையும் உணர்ந்து அதிர்ந்தே போயுள்ளார் ரிச்.

20 ஆண்டுகளுக்கு முன், குழந்தையாக பார்த்த பெண்ணே தனக்கு மனைவியாக வந்ததால் தலை சுற்றி போன ரிச் இது பற்றி பேசுகையில், "குழந்தையாக ஈவி இருந்த போது அவரை சந்தித்தேன் என்பது சற்று வினோதமாக இருந்தது. ஆனால், அப்போது எதுவும் எனக்கு தெரியவில்லை. இதனை தெரிந்து கொண்டதும் நாங்கள் சிரித்து கொண்டோம். வயது என்பது எங்களுக்கு ஒரு எண் மட்டுமே. பலரும் நான் இவியின் தந்தை என்றே தவறாக கருதி வருகிறார்கள். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

couple with 19 year age gap realised he meet his wife as a baby

ஈவியை மணந்தது தான் என் வாழ்வின் சிறந்த நாள். அவருடன் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளேன்" என ரிச் தெரிவித்துள்ளார்.

அதே போல, ரிச்சின் மனைவியான ஈவி இது பற்றி பேசுகையில், "நான் குழந்தையாக இருந்த போது, ரிச் என்னை சந்தித்தார் என்றது சற்று வித்தியாசமாக இருந்தது. ஆனால், அவர் மிகவும் வேடிக்கை ஆனவர். சிறந்த மனது உடையவர். நாங்கள் ஒன்றாக இருக்கும் போது, எங்களுக்கு இடையே வயது வித்தியாசம் உள்ளது என்பதை ரிச்சின் தாடியை தவிர வேறு எதை வைத்தும் சொல்ல முடியாது" என நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "என்னைய யாருன்னு தெரியுதா??.." 48 வருஷம் கழிச்சு நடந்த 'சந்திப்பு'.. சிலிர்த்து போய் நின்ற பெண்.. 'சுவாரஸ்ய' பின்னணி

Tags : #COUPLE #MARIRED #WIFE #திருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Couple with 19 year age gap realised he meet his wife as a baby | World News.