"என்னைய யாருன்னு தெரியுதா??.." 48 வருஷம் கழிச்சு நடந்த 'சந்திப்பு'.. சிலிர்த்து போய் நின்ற பெண்.. 'சுவாரஸ்ய' பின்னணி
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒருவரது வாழ்க்கையின் பல தருணங்களில், நிச்சயம் நிறைய மனிதர்களை சந்திக்க நேரிடும். அப்படி அவர்கள் ஒருவரை சந்திக்கும் போது, பாதியிலேயே அந்த உறவு பிரிந்து போய் விடுமா அல்லது இறுக்கமான பிணைப்புடன் நடை போடுமா என்ற விஷயமும் உள்ளது.

அப்படி ஒரு சூழ்நிலையில், நமக்கு நெருக்கமாக ஒரு நபர் இருக்கும் போது, ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நம்மால் பின்னர் பார்க்காமலே போய் விடும்.
ஆனால், குறுகிய காலத்தில் அந்த நபர் உண்டு பண்ணிய தாக்கம் என்பது, மிக பெரிதாக கூட இருக்கலாம்.
இப்படி நாம் வேண்டும் என நினைத்து, பாதியிலேயே விலகிச் செல்லும் நபர்கள், நிச்சயம் அனைவரின் வாழ்க்கையிலும் இருப்பார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில், பெண் ஒருவருக்கு அவரது பிள்ளைகள் செய்த நெகிழ்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, இணையத்தில் வெளியாகி பலரையும் மனம் உருக வைத்துள்ளது.
சமீபத்தில் வெளியான வீடியோவின் படி, பெண் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் அருகே மற்றொரு பெண் ஒருவர் வந்து நிற்க, அவர் யார் என்றும் அடையாளம் தெரிந்ததும், நாற்காலியில் இருந்த பெண்ணும், ஒரு நிமிடம் யோசனையுடன் எழுந்து அருகே செல்கிறார். பின்னர் யார் என்பதை மற்ற பெண் தெளிவாக விளக்க, ஒரு நொடி அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய், வேகமாக அவரை கட்டியணைத்து ஆனந்த கண்ணீரும் வடிக்கிறார்.
சற்று வயதான பெண்மணி ஒருவர், தன்னுடைய 8 ஆம் வகுப்பில் படித்த பெண் ஒருவரை பார்க்க வேண்டுமென நீண்ட நாளாக ஆசைப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், அவரது பிள்ளைகள் சுமார் 48 ஆண்டுகளுக்கு முன், தனது தாயுடன் படித்த அவரது நெருங்கிய தோழியை கண்டுபிடித்துள்ளனர். அது மட்டுமில்லாமல், தாயின் கண் முன்னே அவர்கள் கொண்டு வந்து நிப்பாட்டவே, உண்மை என்ன என்பது தாய்க்கு தெரிந்ததும், அவர் தனது பள்ளித் தோழியை கட்டியணைத்து தேற்றவும் செய்கிறார்.
பள்ளித் தோழியை 48 வருடங்களுக்கு பிறகு கண்டதும், அந்த பெண் கொடுக்கும் ரியாக்ஷன் தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் வைரலாகி இது போல நெருக்கமான பள்ளி நண்பர்கள் உள்ள பலரையும் ஒரு நிமிடம் கண் கலங்க செய்யும் வகையில் அமைந்துள்ளது.
Also Read | கரணம் அடித்த 'கபடி' வீரர்... ஆர்ப்பரித்த மக்கள்.. அடுத்த ஒரு சில வினாடிகளில் நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்!!

மற்ற செய்திகள்
