"வீட்டு வாசனை பிடிக்கலயாம்".. ADVANCE-ல ₹20 ஆயிரம் CUT பண்ண ஹவுஸ் ஓனர்! TENANT சொன்ன காரணங்களை கேட்டு தல சுத்தி போன நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்ஜில் ஒரே ஒரு பட்டாணி இருந்ததை காரணம் காட்டி அட்வான்ஸ் தொகையை வீட்டு உரிமையாளர் குறைத்திருக்கிறார் என மாணவி ஒருவர் சமூக வலை தளத்தில் எழுதிய பதிவு மீண்டும் தற்போது வைரலாக பரவி வருகிறது.
வாடகை வீடு
வாடகைக்கு வீடு பார்ப்பது எப்போதுமே சிரமமான காரியம் தான். உள்ளே இருக்கும் வசதிகளில் இருக்கும் குறைபாடுகளை கண்டறிந்து நம்முடைய தேவைக்கு ஏற்ற வீட்டை பார்த்துவிட்டாலும் அட்வான்ஸ் தொகையை புரட்டுவதே பலருக்கும் பெரும்பாடாகிவிடுவதுண்டு. அப்படியே முழு தொகையையும் அட்வான்ஸாக கொடுக்கும் பட்சத்தில், வீட்டை காலி செய்யும் போது கொடுத்த பணம் அப்படியே குடியிருப்பாளருக்கு கிடைப்பதில்லை.
வாடகை காலத்தில் வீட்டில் ஏற்பட்ட சேதாரங்களை காரணமாக காட்டி அட்வான்ஸ் தொகையில் வீட்டின் உரிமையாளர்கள் பிடித்தம் செய்வதை நாம் பார்த்திருப்போம். அப்படித்தான் நடைபெற்றிருக்கிறது மாடில்டா ஹார்க்ரீவ்ஸ் என்னும் மாணவியின் வாழ்க்கையிலும்.
அட்வான்ஸ்
இங்கிலாந்து நாட்டில் உள்ள லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகதில் ஆங்கில இலக்கியம் படித்துவருகிறார் மாடில்டா. இதற்காக அருகில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்திருக்கிறார். 7 அறைகளை கொண்ட அந்த வீட்டில் அவருடன் சேர்த்து 3 மாணவிகள் தங்கியிருந்திருக்கின்றனர். கொரோனா காரணமாக நேரடி கல்லூரி வகுப்புகள் நடைபெறாத நிலையில், வீட்டில் இருந்தே அவர் படிப்பினை ஆன்லைன் மூலம் தொடர்ந்திருக்கிறார். அதன்பிறகு ஒருகட்டத்தில் அந்த வீட்டை காலி செய்யும் போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணங்கள்
அந்த வீட்டின் உரிமையாளர் அட்வான்ஸ் தொகையில் இருந்து 210 யூரோக்களை (இந்திய மதிப்பில் சுமார் 20 ஆயிரம் ரூபாய்) பிடித்தம் செய்து மீதி பணத்தை கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாடில்டா தங்களுடைய அட்வான்ஸ் தொகை குறைக்கப்பட்டதன் காரணமாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதில்,"பிரிட்ஜில் ஒரு பட்டாணி துண்டு இருக்கிறது. இதை சுத்தம் செய்வது கடினமான வேலையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். ரூம் பிரெஷ்னரை விட்டுச் சென்றதற்காகவும் அட்வான்ஸ் தொகை குறைக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு அதன் வாசனை பிடிக்காமல் போயிருக்கலாம். அவர்களுடைய ஈரப்பதத்தை குறைக்கும் இயந்திரம் ஒன்று இருந்தது. இதனை பயன்படுத்தாமல் இருந்ததாலும் இது நடந்திருக்கலாம். தரையில் ஒரு பேப்பர் கிடந்தது. அதை சுத்தம் செய்ய பல வேலையாட்களை அவர்கள் பணியில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும்" என காரணங்களை அவர் அடுக்கியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்திருக்கிறது. மாடில்டா-வின் இந்த பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read | 75 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி.. அலைமோதிய கூட்டம்.. பிரியாணியுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடிய மக்கள்..!