“நகை, பணம்தான் ஒன்னும் கெடைக்கல.. சரி, வந்ததுக்கு இதையாச்சும் பண்ணிட்டு போவோம்!”.. 'விநோத' திருடர்கள் செய்த 'வேற லெவல்' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 22, 2020 11:37 AM

நகை, பணம் எதுவும் கிடைக்காததால், திருடச் சென்ற திருடர்கள் விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட்டும் , மது அருந்திவிட்டும் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

this is what thieves did after not found jewel and money

திருவண்ணாமலையை அடுத்த ஆண்டாம்பட்டு கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்த திருடர்கள் உள்ளிட்ட தங்களது டார்கெட்டுகள் எதுவும் அந்த வீட்டில் கிடைக்காததால், அந்த வீட்டிலேயே விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட்டு, மது அருந்திவிட்டு சென்றுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் குமார், சென்னை ஆவடியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

அவரது மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். 15 நாட்கள் கழித்து வீடு திரும்பிய அவர் பின்பக்க ஜன்னல் கம்பி உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ந்தார். பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லை என்பதால் ஏமார்ந்த திருடர்கள் கிச்சனுக்குள் புகுந்து, எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் என வகைவகையாக சமைத்து சாப்பிட்டுள்ளனர்.  அருகில் மது பாட்டில்களும் இருந்துள்ளன.

ஜன்னல் வழியே சிறுவனை அனுப்பி, பின்பக்க கதவைத் திறந்து திருடர்கள் உள்ளே சென்றிருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில் போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #LOCKDOWN