கொரோனாவால் 'பாதிக்கப்பட்டவர்கள்' குறைவு... குணமடைந்தவர்கள் அதிகம்... 'நம்பிக்கையளிக்கும்' தமிழக மாவட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 22, 2020 02:13 PM

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கோவை மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

86 People cured from Corona in Coimbatore District

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் வருகின்ற மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் சென்னையில்(358) அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் கோவை(134) மாவட்டம் உள்ளது. தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கோவை மக்கள் மத்தியில் சிறிது அச்சம் நிலவியது.

ஆனால் தற்போது நிலைமை அங்கே மாறி வருகிறது. கடந்த 5 நாட்களில் புதிதாக 7 பேருக்கு மட்டுமே அங்கு கொரோனா பாஸிட்டிவ் ஆகியுள்ளது. அதே நேரம் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது அதிலிருந்து வேகமாக மீள ஆரம்பித்து இருக்கின்றனர். ஏற்கெனவே 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில், நேற்று மேலும் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கோவையில் மட்டும் 86 பேர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர். முக்கியமாக, கடந்த இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 50 பேர் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் கோவை மக்கள் மத்தியில் தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ''கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க, மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என்று மிகப்பெரிய குழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அதன் பலனாகத்தான் பாதிக்கப்பட்டவர்கள் வேகமாகக் குணமடைந்து வருகின்றனர். பொது மக்கள் அரசின் நடவடிக்கைக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். கோவையில் 100 சதவிகிதம் வைரஸ் தொற்று இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்,'' என தெரிவித்து இருக்கிறார்.