தமிழகத்தில்’ புதிதாக ‘2 பேருக்கு’ கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை ‘40 ஆக’ உயர்வு... ‘சுகாதாரத்துறை’ தகவல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 28, 2020 03:33 PM

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

TN 2 New Positive Cases Of Coronavirus In Thanjavur Vellore

தமிழகத்தில் ஏற்கெனவே 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் ஒருவர் கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயது நபர். மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பிய பின்னர் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொருவர் பிரிட்டனில் திரும்பிய 49 வயது நபர். காட்பாடியைச் சேர்ந்த இவருக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவருடைய உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

 

Tags : #CORONAVIRUS #TN #THANJAVUR #VELLORE #KUMBAKONAM #KATPADI