'எது பேசுறதா' இருந்தாலும் 'ஃபோன்லயே பேசு...' 'சாதாரணமா' பேசுனாலே 'பரவுமாம்...' 'ஆய்வில் அதிர்ச்சித் தகவல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்சாதாரணமாக பேசும்போது வாயிலிருந்து வெளிப்படும் சுவாசத் துளிகளில் இருக்கும் கொரோனா வைரஸ் எட்டு நிமிடங்களுக்கு அதிகமாக அந்த இடத்தில் உயிருடன் இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் சமூகப் பரவல் குறித்து பென்சில்வேனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. லேசர் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒருவர் ஒரு நிமிடம் சத்தமாக பேசினால் அவரது வாயிலிருந்து வெளிப்படும் சுவாசத் துளிகள் 8 நிமிடங்கள் உயிருடன் காற்றில் உலவக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளிப்படும் சுவாசத் துளிகளில் சுமார் ஆயிரம் வைரஸ்கள் அடங்கிய கிருமிகளின் அணுக்கருக்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே மருத்துவமனைகள், வீடுகள், மாநாட்டுக் கூட்டங்கள், சொகுசுக் கப்பல்கள், விமானங்கள், மற்றும் காற்று சூழற்சி அதிகம் இல்லாத இடங்களில் கொத்து கொத்தாக தொற்று ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
