'இந்த' வழக்கில் கைதானால் 'ஜாமீன்' கிடையாது... 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை... 'அவசர' சட்டம் கொண்டு வரும் மத்திய அரசு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 22, 2020 03:58 PM

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களை தங்களை பகுதிகளில் புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என மக்கள் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சகட்டமாக மருத்துவர்களை தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

Attacks on Healthcare Professionals will be sentenced Jail up to 7 Yea

இந்த நிலையில் மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை என்ற மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், '' மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. மருத்துவர்களின் மீதான வன்முறை எத்தகைய வழியில் இருந்தாலும் அரசு பொறுத்துக்கொள்ளாது. இந்த குற்றத்தில் கைதானால் அவர்களுக்கு ஜாமீன் கிடையாது. 30 நாட்களில் வழக்கு நடத்தி முடிக்கப்படும். வழக்கின் முடிவில் மருத்துவர்கள் தாக்கப்பட்டது நிரூபணமானால் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அளிக்கப்படும். குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பின் இந்த சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும்,'' என தெரிவித்து இருக்கிறார். 

Photo Credit: ANI