‘அத்தனை பேரும் தேவதைங்க!’.. ‘மாஸ்க் இல்லாத சீன செவிலியர்கள்’.. கண் கலங்கவைக்கும் புகைப்படங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 06, 2020 08:56 PM

சீனாவில் தற்போது உருவாகி உலகையே அச்சுறுத்தி வரும் கொடூர வைரஸான கொரானா பற்றி சீன மருத்துவரான வெண்லியாங் கடந்த டிசம்பரிலேயே இதுபற்றி எச்சரித்துள்ளார்.

Nurses take off their face masks pics touches the hearts

இதுவரை 550 பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ள நிலையிலும் 24 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த நோயை கட்டுக்குள் கொண்டுவர, சீன அரசு தொடங்கி உலகம் முழுவதும் பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.

சீன மருத்துவர்களோ தங்கள் உடல்நிலை பற்றி கவலைப் படாமல் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், சீன செவிலியர்கள் 3 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், எந்நேரமும் கொரோனா தொற்று தாக்காமல் இருக்க முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருவதால் அவர்களின் முகத்தில் வடுக்கள் படிந்துவிட்டதாகவுமான புகைப்படங்களை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த புகைப்படங்கள் இணையத்தில்

வலம் வருவதை அடுத்து, சீன செவிலியர்களை தேவதைகள் என்றும் இணையவாசிகள் போற்றிக் கொண்டாடி வருகின்றனர்.

 

Tags : #CHINA