‘கொரோனா பரவலுக்கு தீர்வுகாண’... 'அறிகுறி இல்லாதோருக்கும் பரிசோதனை நடத்த'... மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கொரோன அறிகுறி இல்லாதோருக்கும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் 800 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 70 ஆயிரத்தை தாண்டி பாதிப்பு அதிகரித்து வருவதாலும், அறிகுறி இல்லாதோருக்கும் கொரோனா இருப்பதாலும் மாவட்ட அளவிள் பரிசோதனையை தீவிரப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநிலங்களும் மாவட்ட அளவில் கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கும் வாரத்திற்கு 200 பேர் வீதம், மாதத்திற்கு 800 சோதனைகள் நடத்த வேண்டுமேன இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்ய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிக ஆபத்துள்ள குழு மற்றும் குறைந்த ஆபத்துள்ள குழு என பரிசோதனை மாதிரியை இரண்டு குழுக்களாக வகைப்படுத்தியுள்ளது. அதில், அதிக ஆபத்துள்ள குழுவில் சுகாதாரப் பணியாளர்கள் போன்றோர் மாதத்திற்கு 400 பேர் பரிசோதிக்கப்படுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள், குளிர் இருமல் மற்றும் சளி இல்லாதவர்கள் குறிப்பாக அறிகுறியற்றவர்கள் குறைந்த ஆபத்துள்ள குழுவின் கீழ் வகைப்படுத்தப்படுவார்கள். இதில் மாதந்தோறும் 800 பேர் சோதிக்கப்படுவர். சுகாதார அமைச்சகத்தின் இந்த திட்டத்தின் மூலம், நோய்த்தொற்றின் அறிகுறிகள் இல்லாத கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் ஒரு மாதத்தில் கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்படுவார்கள்.
