‘வரலாறு காணாத பேரிழப்பு’... ‘அதனால வேற வழி தெரியல’... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 12, 2020 02:09 PM

கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தக இழப்பின் தொடர்ச்சியாக ஊழியர்கள் 1,300 பேரை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரபல ஹோட்டல் நிறுவனமான ஹயாத் அறிவித்துள்ளது.

Hyatt Hotels to Terminate 1300 Employees June 1 to Cut Costs

இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் ஆடம்பர ஹோட்டல் உள்ள ஹயாத்தில் மொத்தம் 55,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 1300 பேர் வரும் ஒன்றாம் தேதி உரிய இழப்பீட்டுடன் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனியர் அதிகாரிகளுக்கு சம்பளகுறைப்பு செய்துள்ளதாகவும் ஹயாத் கூறியுள்ளது. கடினமான சூழலில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் எதிரொலியாக ஹோட்டல் துறையில் வரலாறு காணாத வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹயாத் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனாவால் சர்வதேச அளவில் ஹோட்டல் துறைக்கு 10,640 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.