'700க்கும்' அதிகமான எண்ணிக்கையுடன் 'முதலிடம்'... 'எந்தெந்த' மண்டலங்களில் 'எத்தனை' பேருக்கு பாதிப்பு?... 'விவரங்கள்' உள்ளே...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 8,002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 742 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து திரு.வி.க.நகரில் 590 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 713 பேருக்கும், தேனாம்பேட்டையில் 458 பேருக்கும், அண்ணாநகரில் 349 பேருக்கும், வளசரவாக்கத்தில் 379 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 327 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற மண்டலங்களாக அம்பத்தூரில் 224 பேருக்கும், அடையாறில் 212 பேருக்கும், திருவொற்றியூரில் 98 பேருக்கும், பெருங்குடியில் 51 பேருக்கும், ஆலந்தூரில் 46 பேருக்கும், மாதவரத்தில் 65 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 52 பேருக்கும், மணலியில் 50 பேருக்கும் இதுவரை பாதிப்பு உறுதியாகியுள்ளது.
