மசாஜ் ரூம், ஸ்பா, யோகா சென்டர், அடேயப்பா இன்னும் என்னெல்லாம்...! 'இந்தக் கப்பலோட விலைய கேட்டா அப்படியே ஆடிப் போயிருவாங்க...' பில்கேட்ஸ் வாங்கிய சூப்பர் கப்பல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 10, 2020 12:49 PM

மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளவருமான பில்கேட்ஸ், அதிநவீன சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார்.

Billgates purchased a sophisticated luxury cruise ship.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, உலகின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயல்படும் நிறுவனங்களுக்கு உதவுவது உள்ளிட்ட செயல்களுக்காக தொடர்ந்து தனது பணத்தை தாராளமாக செலவிட்டு வருகிறார். இதன் பொருட்டு பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.4,600 கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை வாங்க சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பில்கேட்ஸ் மிகவும் விரும்பி வாங்கியுள்ளதாக கூறப்படும் பிரமாண்டமான சூப்பர் சொகுசு கப்பல், முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் என தெரிகிறது. மேலும் இதில் பல அதிநவீன வசதிகள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த அதிநவீன ஸ்மார்ட் கப்பல் 5 தளங்களை கொண்டது. இதில் 2 வி.ஐ.பி தங்கும் அறைகள், பிரமாண்டமான ஒரு உரிமையாளர் காட்சி அரங்கம், 14 இரட்டைக் குழு அறைகள், 2 அதிகாரி அறைகள் மற்றும் ஒரு கேப்டன் அறை ஆகியவை அடக்கம். மேலும் இந்த கப்பலில் ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு ஹைட்ரோ-மசாஜ் அறை , யோகா ஸ்டுடியோ, நீச்சல் குளம் அடங்கிய சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் அமைக்கப்படும். நீச்சல் குளம், ஹெலிபேட், ஸ்பா மற்றும் உட்புறக் குளம் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளை பில்கேட்ஸின் இந்த புதிய சொகுசு கப்பல் கொண்டுள்ளது. மேலும் வட்ட வடிவமைப்பிலான அற்புத படிக்கட்டுகள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் பற்றாக்குறை காரணமாக படகில் “டீசல் பேக்அப் ” இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #BILLGATES #SHIP