'இந்த ரணகளத்துலையும் உங்களுக்கு கிளுகிளுப்பு...' 'எங்களுக்கு லாக்டவுன் முடிஞ்சு போச்சு...' சுற்றுலா தளங்களில் அலையலையாக குவிந்த சீனமக்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Apr 07, 2020 09:07 PM

சீனாவில் இயல்பு நிலைக்கு திரும்பி மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களை நோக்கி செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

Chinese people with terrific crowds at tourist sites

தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருவான சீனாவில் மக்கள் இயல்பு வாழ்விற்கு திரும்பி சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் சில தங்களுடைய எல்லைகளை முடியும், லாக் டவுன் அறிவித்து வரும் இந்நிலையில் சீனமக்களின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு "இந்த ரணகளத்துலையும் உங்களுக்கு கிளுகிளுப்பு " என பார்வையாளர்களால் கிண்டல் செய்யப்படுகிறது.

முதன் முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் செயல்படும் ஒரு விலங்கு விற்பனை மார்க்கெட்டிலிருந்து பரவியதாக கூறப்பட்டது. விலங்குகளிருந்து மனிதர்களுக்கு பரவிய இந்த கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து உலக நாடுகள் பலவற்றிற்கு பரவி இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் பரவி வரும் இந்த கொரோனா வைரஸிலிருந்து சீனா தற்போது மீண்டு வந்துள்ளது என சீனா அரசு வெளியிட்ட அறிக்கையில் இருந்து உணர முடிகிறது. மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவை நீக்கியதோடு மட்டும் இல்லாமல், சில கட்டுப்பாடுகளோடு அனைத்து துறை தொழிற்சாலைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளது.

மேலும் போக்குவரத்து தடைகளை தளர்த்தி உள்ள நிலையில், எப்பொழும் போல் இயங்கி வரும் சீனாவில்  சுற்றுலாத்தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 24 தேதி முதல் கடும் கட்டுப்பாட்டிற்குள் இருந்த சீனமக்கள் கடந்த சனிக்கிழமை அன்று ஹாங்ஷான் மலைப்பகுதியில் உள்ள பூங்காவுக்கு கடலென குவிந்துள்ளனர்.

சீனாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலே மக்கள் சுற்றுலா பூங்காக்களில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றாலும் காலை 07.48 மணிக்கே அதிகபட்ச அனுமதி எண்ணிக்கையான 20 ஆயிரத்தை எட்டியுள்ளது.

மேலும் ஷாங்காய் நகரில் பந்த் பகுதியில் உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதியுள்ளது. இதனால் சில ஹோட்டல் நிர்வாகங்கள் நெரிசலைக் கட்டுப்படுத்த முன்பதிவு செய்தால்தான் உள்ளே நுழைய முடியும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் இன்னும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு முடிவு ஏற்படவில்லை என சீனாவின் மூத்த தொற்று நோயியல் மருத்துவர் ஜெங் குவாங் எச்சரித்திருக்கிறார்.

Tags : #CHINA