'நீங்களாம் எப்படி இளைஞர்கள் கிட்ட வர்றீங்க?'.. 'என்னா தைரியம் இருக்கணும்?' விளாசிய சிறுமிக்கு ‘விருது’ ரெடி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 25, 2019 08:27 PM

இந்த உலகத்தின் முன்னால் தற்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பல காத்திருக்கின்றன. அவற்றிற்கு தீர்வு காண முன்வருவோரை ஊக்குவிக்கும் முறையிலும், அவர்களின் ஆதங்கத்தை மரியாதை பண்ணும் விதத்திலும் ஸ்வீடனில் ரைட் லைவ்லிஹூட் அறக்கட்டளை அளிக்கும் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

young activist greta thunberg gets Right Livelihood Awar

நோபல் பரிசுக்கு இணையான இவ்விருதிற்கு இந்த வருடம், ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி க்ரேடா தன்பெர்க்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிக அண்மையில்தான் சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஐ.நா சபையில் பேசிய க்ரேடா, சுற்றுச் சூழலை பாதுகாக்கத் தவறிய உலகத் தலைவர்களை கடுமையாக சாடியது வைரலானது.

க்ரேடா தன்பெர்க்குடன் சேர்த்து, பிரேசிலின் பழங்குடி இன தலைவர் டேவி கோபநாவா, சீனாவை சேர்ந்த மகளிர் உரிமைகள் வழக்குரைஞர் குவோ ஜியான்மெய், மேற்கு சஹாரா மனித உரிமைகள் பாதுகாப்பாளர் அமினாதோ ஹைதர் உள்ளிட்டோரும் இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 4 பேருக்கும் விருதுடன் சேர்த்து தலா 1.3 லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதியாகவும் வழங்கப்படவுள்ளது.

Tags : #GRETA THUNBERG #UNO #ENVIRONMENT #ACTIVIST #RIGHTLIVELIHOODAWARD