கிறிஸ்துமஸ் GIFT.. ரொனால்டோ-க்கு காதலி கொடுத்த சர்ப்ரைஸ்.. வாயடைச்சுப்போன நெட்டிசன்கள்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அவரது காதலி கிறிஸ்துமஸ் பரிசாக விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது.

கால்பந்து உலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ரொனால்டோ போர்ச்சுக்கல் அணியை சேர்ந்தவர். சமீபத்தில் கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ரொனால்டோவின் ஆட்டத்தை பார்க்கவே பல லட்சக்கணக்கான மக்கள் போர்ச்சுக்கல் அணியின் போட்டிகளை விரும்பி பார்த்தனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிகர்ஸ் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் பரிசாக ரொனால்டோவிற்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை வழங்கியிருக்கிறார் ஜார்ஜினா ரோட்ரிகர்ஸ். இந்த வீடியோவை ஜார்ஜினா ரோட்ரிகர்ஸ் தனது சமூக வலைதலப் பக்கத்தில் பகிர, இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் தனக்கென தனது காதலி வாங்கிய காரை ஆச்சர்யத்துடன் பார்க்கிறார் ரொனால்டோ. தனது குழந்தைகளுடன் நிற்கும் அவர், காரை கண்டதும் கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் காரை பார்க்கும் காட்சி அவரது ரசிகர்களை நெகிழ செய்திருக்கிறது. அதன் பின்னர் குடும்பமாக அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரொனால்டோ குடும்பத்தினர் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
இதனையடுத்து, இந்த சர்ப்ரைஸ் பரிசுக்காக தனது காதலிக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவு ஒன்றையும் எழுதியிருக்கிறார் ரொனால்டோ. முன்னதாக ஜார்ஜினா ரோட்ரிகர்ஸ் ரொனால்டோவின் பிறந்தநாளுக்கு கெடில்லாக் எஸ்க்லேட் (Cadillac Escalade) காரை பரிசாக வழங்கியிருந்தார். அப்போதும், அந்த தருணத்தை அவர் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது வீட்டில் புகாட்டி சிரோன், ஃபெராரி டி12 டிடிஎஃப், புகாட்டி வேய்ரான், மெக்லாரன் சென்னா, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி-வேகன், லம்போர்கினி அவென்டடோர், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட், மஸராட்டி கிரான் காப்ரியோ, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் உள்ளிட்ட பல அரிய கார்களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறது இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ்.

மற்ற செய்திகள்
