'2 மணி நேரத்துல சென்னை TO கன்னியாகுமரி தூரமே போயிடுமா..?'.. புயலை மிஞ்சும் அசுர வேகம்.. சீனாவின் அதிரடி ரயில்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அதிவேகத்தில் பயணிக்கக்கூடிய சீன ரயிலை சோதிக்க தயாராகி வருகிறது இந்தோனேஷியா. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
Also Read | வானம் எல்லோருக்கும் சொந்தம்.. விண்ணில் பாய இருக்கும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. முழு விபரம்..!
போக்குவரத்தின் தேவை உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தொலைவான நகரங்களை மிகக் குறைவான நேரத்தில் இணைக்கக்கூடிய போக்குவரத்து சாத்தியங்கள் குறித்து உலக நாடுகள் சிந்தித்து வருகின்றன. குறிப்பாக அதிவேக ரயில்களை உருவாக்கி, அதன்மூலம் போக்குவரத்தின் தேவையை குறைக்க உலக நாடுகள் பலவும் முயன்று வருகின்றன. அந்த வகையில், இந்தோனேஷியாவின் உட்கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படும் ஜகார்த்தா - பாண்டுங் இடையிலான அதிவேக ரயிலை தயாரித்திருக்கிறது சீனா.
இந்தோனேஷியாவோடு BRI (Belt and Road Initiative) எனும் திட்டத்தில் கைகோர்த்துள்ளது சீனா. இதன் ஒரு பகுதியாக இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா - பாண்டுங் இடையிலான அதிவேக ரயில் சேவையை வடிவமைத்து வருகிறது சீனா. இதற்காக Electric Multiple Unit (EMU) எனும் அதிவேக ரயிலை உருவாக்கியது சீனா. இந்த ரயில் இந்தோனேஷியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடிய இந்த ரயில் இந்த மாத இறுதிக்குள் இந்தோனேஷியாவில் பரிசோதனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதற்காக 14 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் டிராக்கை தயார் செய்து வருகிறது இந்தோனேஷியா. இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் ஜகார்த்தா - பாண்டுங் இடையிலான பயண நேரம் 3 மணி நேரங்களில் இருந்து 40 நிமிடங்களாக குறையும் என எதிர்பாக்கப்படுகிறது. அதாவது, இந்த ரயில் தமிழகத்தில் இயக்கப்பட்டால் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நம்மால் 2 மணி நேரத்தில் சென்றுவிட முடியுமாம்.
இந்தோனேஷியாவின் Tegalluar ரயில் நிலையத்தில் இந்த அதிவேக Electric Multiple Unit ரயிலுக்கான சோதனை நடைபெற இருக்கிறது. இதற்கான மின் கட்டமைப்பிலும் அந்நாட்டுக்கு சீனா உதவி வருகிறது. இந்த ரயில் அடுத்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
Also Read | சும்மா சுர்ருன்னு.. உலகத்தின் காரமான மிளகாய்.. அசால்ட் காட்டிய நபர்.. மிரண்டு போன கின்னஸ் அதிகாரிகள்..!