'இந்த ஏவுகணை'யோட ஸ்பீடுக்கு முன்னால... 'ஒலியோட வேகம் தோற்று போயிடும்...' 'வட கொரியா'வை தொடர்ந்து இவங்களுமா...? - உலகத்துக்கு 'பயம்' காட்டும் நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் காரணமாக பல உலக நாடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள முயன்று வரும் நிலையில் சீனா செய்துள்ள காரியம் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, வடகொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து தங்களின் அணு ஆயுத பலத்தை மற்ற உலக நாடுகளுக்கு காண்பித்து வருகின்றன.
பைனான்சியல் டைம்ஸ் சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை செய்ததற்கான பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சீனா சோதனை செய்த இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியை விடவும் 5 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பயணிக்கும் தன்மை உடைய என்ஜினைக்கொண்டு ராக்கெட் செலுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் சீனாவின் முன்னேற்றம் அமெரிக்க உளவுத்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் அதிவேக செயல்பாடு எதிரிகளை செயல்பட விடாமல் செய்யுமாம். இது வளிமண்டலத்தில் குறைந்த பாதையில் பறந்து, இலக்கை விரைவாக அடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவும் சில வாரங்களுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்தது குறிப்பிடத்தக்கது.