‘ஒரே நாளில்’.. கூண்டாக ராஜினாமா செய்த 1000 மருத்துவர்களால் பரபரப்பு!.. ஸ்தம்பிக்கும் அரசு மருத்துவமனைகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 03, 2020 06:20 PM

பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

Madhya Pradesh: 1,000 medical college teachers quit

ஆயிரம் பேராசிரியர்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மேலும் 2300 மருத்துவப் பேராசிரியர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை தலைமைக்கு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ராஜினாமா முடிவை தெரிவித்துள்ள மருத்துவ பேராசிரியர்கள், வரும் 9-ம் தேதி முதல் பணிக்கு வரப்போவதில்லை எனத்தெரிவித்துள்ளனர்.

இதில் காந்தி மருத்துவக்கல்லூரியுடன் இயங்கி வரும் ஹமதியா மருத்துவமனையில் மட்டுமே, நாள் ஒன்றுக்கு சுமார் 3500 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #DOCTORS #MADHYA PRATHESH #PATIENTS