'எங்க இடத்துல தீப்புடிச்சிருச்சு...' 'கொஞ்சம் நேரம் உங்க ஹெலிகாப்டர்ல உட்கார இடம் தருவீங்களா...' - நெகிழ வைத்த ஆந்தை...!
முகப்பு > செய்திகள் > உலகம்கலிபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயை அணைக்க சென்ற மீட்பு விமானத்தில் ஆந்தை தஞ்சமடைந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க பல மீட்பு விமானங்களும், தீயணைப்பு ஊழியர்களும் அயராது பாடுபட்டுவரும் நேரத்தில் தற்போது மீட்பு ஹெலிகாப்டரை இயக்கிய விமானி டேன் அல்பைனர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
தீயணைப்பு படை வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டரில் அழையா விருந்தாளியாக ஆந்தை ஒன்று வாலண்டரியாக வந்து சில நிமிடம் பயணித்துள்ளது. அந்த நேரத்தில் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி டேன் அல்பைனர் தனது கேமிராவில் படம் பிடித்துள்ளார்.
அந்த புகைப்படத்தை SKY AVIATION என்ற நிறுவனம் அதன் சமூக வலைத்தளங்களில் பகிர, ஆந்தையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் அப்புகைப்படத்தின் கீழே SKY AVIATION, 'ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் ஆந்தை தஞ்சம் புகுவது அரிதான நிகழ்வு. சில நிமிடங்கள் இளைப்பாறி விட்டு அது மீண்டும் ஹெலிகாப்டரிலிருந்து பிரியா விடை பெற்று சென்றது' என குறிப்பிட்டு பதிவேற்றியுள்ளனர்.
ஒரு சிலர் இந்த ஆந்தை காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தப்பி விமானத்தில் தஞ்சம் புகுந்திருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது வரை கலிபோர்னியா காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 8000-த்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
