VIDEO: பல வருச ‘வலி’.. தோனி செஞ்சதை அப்படியே ‘திருப்பி’ செஞ்ச அக்சர்.. 4 வருசத்துக்கு அப்றம் நடந்த ‘மிராக்கிள்’..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் அடித்த சிக்ஸர்களை தோனியின் பழைய வீடியோ ஒன்றுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டி நேற்று (17.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 185 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 101 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக களமிறங்கிய அக்ஷர் பட்டேல் 5 பந்துகளில் 21 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது புனே அணியின் சார்பாக விளையாடிய தோனி கடைசி ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியை வெற்றி பெற வைத்திருப்பார். அந்த கடைசி ஓவரை வீசியது அக்சர் பட்டேல் என்பது குறிப்பிடத்தக்கது.
This was a proper #DejaVu
moment for the fans !!#Dhoni smashed #axar for 23 in the last over in 2016 to win it for #RPS
Tonight, #axar smashed #jadeja for 21 to seal the deal fro Delhi.
Anr. common thing btw the 2 instances is the commentary of @mmbangwapic.twitter.com/hqZyRmOTn8
— Anubhav Chatterjee (@ac89_tweets) October 17, 2020
#CSKvDC 2020 #axar #jadeja #Dhawan #Dhoni #KXIPvsRPS 2016
these two matches are quite similar but the heroes are different, its like revenge is taken.
once #axar was kidnapped by #Dhoni in lst ovr in 2016,
In 2020 #Axar kidnapped #jadeja and #Dhoni in lst ovr.#IPLthrillers pic.twitter.com/neWFYfBp00
— JRD Diwan (@Jayrocks3) October 17, 2020
இந்த நிலையில் 4 வருடங்கள் கழித்து சென்னை எதிரான போட்டியின் கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் அடித்த 3 சிக்ஸர்கள் டெல்லி அணிக்கு வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது இந்த இரண்டு வீடியோக்களையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.