நிவாரண பொருள் கொண்டு செல்லும் வழியில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் ..! 3 பேர் பலியான பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 21, 2019 04:25 PM

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிவாரண பொருள்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 dead as helicopter carrying flood relief to Uttarkashi crashes

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்து இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாராண பொருள்கள் வழங்க மூன்று பேர் கொண்ட குழு ஹெலிகாப்டரில் புறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் உத்தர்காஷி என்னும் மாவட்டத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து விபத்து நடந்த பகுதிக்கு 10 பேர் கொண்ட மீட்பு குழு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விபத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

Tags : #FLOOD #HELICOPTER #CRASHES #UTTARKASHI #DEAD #FLOODRELIEF