VIDEO: சண்டைனா 'இப்டி' இருக்கணும்... 'ஹெட்போன்'ல கேட்டுப்பாருங்க பாஸ்... சும்மா தெறிக்குது!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரண்டு புலிகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் அவ்வப்போது காட்டு விலங்குகள் குறித்த வித்தியாசமான வீடியோக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவரின் வீடியோக்களை ரசிப்பதற்கென்றே பலரும் இவரை ட்விட்டரில் பின்தொடர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் சிறுத்தை ஒன்று மானை கொன்று மரத்தின் மீதி அதை தூக்கிக்கொண்டு ஏறும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இரண்டு புலிகள் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் வீடியோ ஒன்றை இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
Territorial fight between two full grown #tigers. Listen with headphones. Powerful Roar & it's echo from Indian #forests. Via WA. Today project tiger has completed 47 years in #India. pic.twitter.com/hiLonKXrif
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 1, 2020
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''வளர்ந்த இரண்டு புலிகள் சண்டையிடுகின்றன. ஹெட்போனில் கேட்டு பாருங்கள். ஆக்ரோஷமாக அவை எழுப்பும் ஒலி இந்திய காடுகளில் எதிரொலிக்கிறது. புலிகள் பாதுகாப்பு தொடர்பாக இந்திய அரசு பாதுகாப்பு திட்டம் தொடங்கி இன்றோடு 47 ஆண்டுகள் ஆகிறது,'' என தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஒவ்வொரு உறுமலுக்கும் பயமாக இருக்கிறது என கருத்து தெரிவித்து, வீடியோவை பாராட்டி வருகின்றனர்.
