'கொரோனா' தடுப்பூசி? கூடாது...! அபார்ஷன்? கூடவே கூடாது...! - அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்கும் 'அதிரடி' வேட்பாளர்! - 'அதிர்ச்சியில்' டிரம்ப், ஜோ பிடன்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ராப் பாடகரான கேன் வெஸ்ட், அவருடைய அரசியல் கொள்கைகளை தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருப்பதால், இப்போது இருந்தே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், ஜோ பிடனுக்கும்தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, அந்நாட்டைச் சேர்ந்த ராப் பாடகரான கேன் வெஸ்ட், தன்னையும் அமெரிக்க அதிபருக்கான போட்டியில் இணைத்துக்கொண்டுள்ளார்.
அவருடைய அரசியல் பயணத்தில், அவரது மனைவி கிம் கார்டாஷ்யனும், உலகப் புகழ் பெற்ற தொழில் நுட்பவியலாளரான எலான் மஸ்க்கும் துணை நிற்கின்றனர். இந்நிலையில், தன்னுடைய அரசியல் கொள்கைகள் குறித்து கேன் வெஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ' நான் கடவுள் நம்பிக்கையை கல்வி நிறுவனங்களின் மூலம் கொண்டு சேர்க்க விரும்புகிறேன். கருக்கலைப்பை நான் எதிர்க்கிறேன்' என்றார்.
மேலும், கொரோனா தடுப்பு மருந்து குறித்து கேட்டபோது, 'தடுப்பூசிகள் போட்ட பின்பும் ஏன் பல குழந்தைகளின் கை கால்கள் முடக்கம் அடைகின்றன? ஆகையால், தடுப்பூசியைப் பயன்படுத்தி கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று அவர்கள் சொல்லும் போது, நான் மிகவும் விழிப்போடு இருப்பேன். இவை அனைத்தும் கடவுளோடு தொடர்புடையவை. கடவுளை வெறுப்படையச் செய்யும் செயல்களை நாம் நிறுத்து வேண்டும். அதுமட்டுமின்றி, நான் மரண தண்டனையை எதிர்க்கிறேன்' என்றும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
