திடீர்னு வானத்துல தோன்றிய வித்தியாசமான மேகம்.. அதிர்ந்துபோன மக்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Apr 11, 2022 09:21 AM

அமெரிக்காவின் ஒரு பகுதியில் வனத்தில் வித்தியாசமான மேகங்கள் உருவானது சமூக வலை தளங்களில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

Bizarre cloud formation in Alaska Picture Goes Viral

மேகங்கள்

வட அமெரிக்காவின் அலாஸ்கா லேசி மலைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று வனத்தில் வித்தியாசமான மேகம் ஒன்று உருவாகி இருக்கிறது. இதனை கண்ட அந்தப் பகுதி மக்கள் மேகத்தினை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து, சோசியல் மீடியாவில் பகிர தற்போது அது பெரும் பேசுபொருளாகி உள்ளது.

மேலும், இந்த மேகங்கள் ஏலியன்களின் விண்வெளி கப்பல்கள் என்று அழைக்கப்படும்  UFO பூமிக்கு வந்ததால் ஏற்பட்டதாகவும் மக்கள் சொல்லி வருகின்றனர்.

UFO

வானத்தில் அடையாளம் காண முடியாத அளவில் தென்படும் பொருட்களை UFO என்று அழைக்கிறார்கள். UFO என்றால் Unidentified flying object என்று பொருள். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இருந்தே இதுபோன்ற பொருட்களை வனத்தில் பார்த்ததாக பலரும் கூறிவருகின்றனர். இவை வேற்றுகிரக வாசிகளின் விமானங்களாக இருக்கலாம் என நம்புவோரும் உண்டு. ஆனால், இவை ஏதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை.

என்ன நடந்தது?

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அலாஸ்காவில் உருவான மர்ம மேகம் குறித்து தகவல் தெரிந்தவுடன் அலாஸ்கா பகுதி மீட்புக்குழு ஒன்று சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றது. விமான விபத்தாக இருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஏதும் நடைபெறவில்லை என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஜெட்

வானத்தில் வித்தியாசமான மேகங்கள் உருவானதாக தகவல்கள் வெளியானதை அடுத்து விசாரணையில் இறங்கிய மீட்புப்படை இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில்," புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட நேரத்தில் ஒரு பெரிய வணிக ஜெட் அந்த பகுதியில் பறந்து கொண்டிருந்தது. நியூயார்க்கில் உள்ள ஜேஎஃப்கே விமான நிலையத்திற்கு சென்ற அந்த விமானம் காலை சூரியனின் வெளிச்சத்தில் மேகம் போல காட்சியளித்திருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

  ஆனாலும் மக்கள் இந்த வித்தியாசமான மேகம் குறித்து தங்களது கற்பனை கதைகளை தொடர்ந்து பரப்பிவருகின்றனர். இதனை அலாஸ்கா அரசு திட்டவட்டமாக மறுத்துவருகிறது.

Tags : #UFO #AMERICA #ALASKA #அமெரிக்கா #மேகங்கள் #அலாஸ்கா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bizarre cloud formation in Alaska Picture Goes Viral | World News.