அமெரிக்கா என்ன பண்ண போகுது? உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ள ரஷ்யா-உக்ரைன் போர்.. ஜோ பைடன் போட்டுள்ள திட்டம்
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா: ரஷ்யா, உக்ரைன் மீது போர் புரிந்து வருவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நேற்றிலிருந்து ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களில் ராணுவத் தாக்குதலைத் துவக்கியுள்ளது. முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சப்தம் தொடர்ந்து கேட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றனர்.
மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்:
அதோடு, நேற்று ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புட்டின், 'ரஷ்யாவின் பாதையில் குறுக்கிடுபவர்கள் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்' என எச்சரிக்கை விடும் அளவிற்கு சென்றுள்ளார். தற்போது, இரு நாடுகள் இடையே போர் துவங்கி இருப்பதால் உலகப் பொருளாதாரம் பாதிக்கும் என பல நாடுகள் கவலை அடைந்துள்ளன.
தனிமையில் உக்ரைன்:
மேலும், உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் நேற்று (வியாழக்கிழமை) இரவு பேசும் போது, 'ரஷ்யா பெரிய அளவில் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யாவின் வல்லரசு படையை எதிர்த்து உக்ரைன் தனித்துப் போரிட்டு வருகின்றது. ரஷ்ய படைகளை எதிர்கொள்வதில் உக்ரைன் தனித்து விடப்பட்டு விட்டது' என உருக்காமாக கூறினார்.
மனித இனத்திற்கு துன்பத்தை கொண்டு வரும் திட்டமிடப்பட்ட போர்:
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் பேசிய அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், 'அதிபர் புடின் பேரழிவு விளைவிக்கக்கூடிய மற்றும் மனித இனத்திற்கு துன்பத்தை கொண்டு வரும் திட்டமிடப்பட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார்.
நேட்டோ நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்:
இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான முறையில் பதிலளிப்பார்கள். உலகம் ரஷ்யாவை பொறுப்புக்கூற வைக்கும். நாங்கள் நேட்டோ நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்' என தெரிவித்துள்ளார்.
தற்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜி-7 நாடுகளுடன் விர்சுவல் வழியாக கலந்துரையாடல் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வுகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
