செல்பி எடுக்கவந்த ரசிகர்.. கோவத்துல போனை கண்டமாக்கிய ரொனால்டோ..வைரலாகும் வீடியோ..என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரசிகர் ஒருவரின் மொபைல் போனை தட்டிவிட்டு கோபத்துடன் சென்ற கிறிஸ்டியானா ரொனால்டோவின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
போட்டி
கால்பந்து போட்டியின் ஜாம்பவானாக கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். இதன் இடையே இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் பகுதியில் உள்ள கூடிசன் பார்க் (Goodison Park) மைதானத்தில் கடந்த சனிக்கிழமை போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் எவெர்ட்டன் அணியும் களம் கண்டன.
இந்த போட்டியை காண ஏராளமான கால்பந்து ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தார்கள். மிகவும் எதிரார்ப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் ரொனால்டோவின் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
உடைந்த போன்
இந்நிலையில், போட்டி முடிந்ததும் அணி வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் ரொனால்டோவினை புகைப்படம் எடுக்க போனை நீட்டியிருக்கிறார். அப்போது கோபமடைந்த ரொனால்டோ அந்த போனை கீழே தட்டிவிட்டிருக்கிறார். இதனால் மொபைல் போன் கீழே விழுந்து சிதறியது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Ronaldo smashing someone’s phone at full time 🤣🤣 EFC pic.twitter.com/nw0XIK2enR
— EvertonHub (@evertonhub) April 9, 2022
மன்னிப்பு
ரசிகர் ஒருவரின் மொபைல் போனை கிறிஸ்டியானா ரொனால்டோ தட்டிவிட்டு சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது. இதனை அடுத்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,"கடினமான தருணங்களில் உணர்ச்சிகளை கையாள்வது எளிதல்ல. ஆயினும் மரியாதையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும். மேலும் அழகான இந்த விளையாட்டை விரும்பும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். என் கோபத்திற்கு அந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். முடிந்தால் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெறும் போட்டியை வந்து காணுமாறு அந்த ரசிகரை கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.
கோபத்தில் ரசிகர் ஒருவரின் மொபைல் போனை கிறிஸ்டியானா ரொனால்டோ தட்டிவிட்டு சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து, தனது செயலுக்கு ரொனால்டோ மன்னிப்பு கேட்டிருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.